தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Cheyyaru Balu Latest Interview About Mgr Superstar Rajinikanth Clash

Rajinikanth: அவருக்கு அக்காவாக ஜெயாவா?.. போஸ்டரை பார்த்து சிவந்த கண்கள்! - ரஜினிக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த குடைச்சல்கள்!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 06, 2024 06:30 AM IST

அப்போதைய சூப்பர் ஸ்டாராக இருந்த எம்ஜிஆருக்கு ரஜினி மேலேறி அவருடைய இடத்திற்கு வருவது அவருடைய கண்களை உறுத்திக் கொண்டே இருந்தது.

ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த்!

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “ரங்கா என்ற படத்தில் ரஜினிகாந்த் நடிக்க கமிட் ஆன போது, அதில் அவருக்கு அக்காவாக ஜெயலலிதா கமிட்டானார். அவருக்கு அதற்கான அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. 

இது நடந்து 5 நாட்களுக்குப் பிறகு எம்ஜிஆர் இடமிருந்து படக்குழுவுக்கு ஒரு போன் வந்தது. அந்த போனில் பேசிய எம் ஜி ஆர் ஜெயலலிதாவை நான் அரசியலுக்கு தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஆகையால் உங்களது படத்தில் அவர் நடிக்க மாட்டார். அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் கே.ஆர். விஜயா நடிப்பார் என்று கூறினார். இதனையடுத்து படக்குழு அதனை மாற்றியது. 

அப்போதைய சூப்பர் ஸ்டாராக  இருந்த எம்ஜிஆருக்கு ரஜினி மேலேறி அவருடைய இடத்திற்கு வருவது அவருடைய கண்களை உறுத்திக் கொண்டே இருந்தது. இந்த நிலையில்தான்  ரஜினிக்கு இடையூறு கொடுக்கும் வகையில் எம்ஜிஆர் செயல்பட்டார்.

ஒருநாள் எம்ஜிஆர் ராமாபுரம் தோட்டத்தில் இருந்து கிளம்பி, புரசைவாக்கத்தில் இருக்கக்கூடிய தியேட்டர் ஒன்றை திறந்து வைக்க சென்று கொண்டிருந்தார். சைதாப்பேட்டை சாலை அருகே வந்த போது ரஜினிகாந்தின் ரங்கா படத்தின் போஸ்டர்கள் இரு பக்கமும் தட்டி வைத்து வைக்கப்பட்டு இருந்தது. 

அந்த போஸ்டரில் ஒரு கையில் சிகரெட்டும் மற்றொரு கையில் மதுவும் வைத்து ரஜினி தோன்றி இருந்தார். இதனைப் பார்த்த எம்ஜிஆருக்கு கோபம் வந்துவிட்டது. அதே கோபத்தோடு தியேட்டர் திறப்பு நிகழ்ச்சியில் பங்கு பெற வந்தவர் கொந்தளித்து பேச ஆரம்பித்து விட்டார்.  

தற்போதைய இளைஞர்கள் சரியில்லை என்றும் அவர்களை மாற்று திசையில் சினிமா நடிகர்களும் கொண்டு சென்று விடக்கூடாது என்றும் இது குறித்தான முழு பொறுப்பு நடிகர்களுக்கு இருக்கிறது என்று காரசாரமாக பேசினார். 

இந்த நிலையில் அங்கு வந்திருந்த பத்திரிக்கையாளர்கள் எம்ஜிஆர் ரஜினியை தான் தாக்கி பேசியிருக்கிறார் என்பதை கணித்து, அடுத்த நாளே அது தலைப்புச் செய்தியாக்கினர். 

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர் பேசி முடித்து மீண்டும் அந்த சாலை வழியாக செல்லும் பொழுது அங்கு ரஜினியின் போஸ்டர்கள் எம்.ஜி.ஆரின் தொண்டர்களால் அகற்றப்பட்டு இருந்தது” என்று பேசினார்!

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.