எல்லா ஏரியாவுலயும் அய்யா கில்லி.. 300 கோடியை நெருங்கிய அமரன்.. சாதித்த சிவகார்த்திகேயன்..
அமரன் படம் வெளியான 19 நாட்களில் 295 கோடி வசூலை எட்டியுள்ள நிலையில் 20ம் நாளில் 300 கோடியை தொட்டுவிடுமா என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் காத்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் ராணுவத்தில் வீரமரணம் அடைந்தார். அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் தான் அமரன். முகுந்த்தாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் நிலையில், அவரது மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்து இருக்கிறார். ராஜ் குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரித்து இருக்கிறார்.
வசூலில் கெத்து காட்டும் அமரன்
அமரன் திரைப்படம் தீபாவளி பண்டிகை பண்டிகையன்று அக்டோபர் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் வெளியாகும் முன்னரே ப்ரீ புக்கிங்கில் அதிக வசூலைப் பெற்ற நிலையில், வெளியான 19 நாட்களிலும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனால் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. படம் வெளியாகி 19 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்தப் படம் தமிழ்நாட்டில் மட்டும் நேற்று ரூ.1.4 கோடி ரூபாய் வசூலைப் பெற்று இதுவரை மொத்தமாக ரூ. 149.8 கோடி வசூலைப் பெற்றுள்ளது.