தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sivaangi: வித்யாசாகர் மகனுடன் காதலில் விழுந்த சிவாங்கி?

Sivaangi: வித்யாசாகர் மகனுடன் காதலில் விழுந்த சிவாங்கி?

Aarthi V HT Tamil
Oct 31, 2023 12:00 PM IST

வித்யாசாகரின் மகனான ஹர்ஷ்வர்தனுடன், சிவாங்கி நெருக்கமாக இருக்கும் வீடியோ வைரலாகிறது.

வித்யாசாகர் மகனுடன் சிவாங்கி
வித்யாசாகர் மகனுடன் சிவாங்கி

ட்ரெண்டிங் செய்திகள்

அது மட்டுமில்லாமல் வடிவேலு நடிப்பில் வெளியாகி இருந்த ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திலும் சிவாங்கி நடித்து இருந்தார். இவர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றத்தில் இருந்தே இவருக்கு என்று ரசிகர்கள் ஏராளமக உருவாகினர்.

அவர் பேசும் போது கீச்… கீச்.. கீச் என இருக்கிறதே என முகம் சுளிக்க வைக்கும். ஆனால் பாடல் பாடினால் அவ்வளவு அருமையாக இருக்கும்.

கோமாளியாக இருந்த சிவாங்கி கடினமான உழைப்பால் குக் வித் கோமாளியில் குக்காக களமிறங்கினார். அதில் முதல் இடம் கிடைக்கவில்லை என்றாலும் முன்றாம் இடத்தை வென்று சாதனை படைத்தார்.

இந்த நிலையில், பாடல், நிகழ்வுகள் என பிஸியாக சிவாங்கி இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வித்யாசாகரின் மகனான ஹர்ஷ்வர்தனுடன் இணைந்து ஒரு ஆல்பம் பாடல் செய்து இருந்தார். அப்போது இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

இதனையடுத்து அந்த நட்பு காதலாக மாறி இருப்பதாக சொல்லப்படுகிறது. மீண்டும் இருவரும் இணைந்து ஆல்பம் பாடல் செய்து உள்ளனர். அதில் இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானது.

ஆனால் அது தவிர தாங்கள் காதலிக்கிறோம் என இருவரும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்