HBD Haricharan: 'துளி துளி மழையாய் வந்தாளே...'-இசை மழையில் நனைய வைத்த பாடகர்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Haricharan: 'துளி துளி மழையாய் வந்தாளே...'-இசை மழையில் நனைய வைத்த பாடகர்!

HBD Haricharan: 'துளி துளி மழையாய் வந்தாளே...'-இசை மழையில் நனைய வைத்த பாடகர்!

Manigandan K T HT Tamil
Mar 20, 2023 06:15 AM IST

Singer Haricharan: திரைத்துறையில் பல பாடல்களைப் பாடி ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தார்.

பாடகர் ஹரிசரண்
பாடகர் ஹரிசரண்

ஜோஷுவா ஸ்ரீதர் இசையில் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் படத்தில் தான் இவர் முதல் முறையாக பாடினார். அப்போது அவருக்கு வயது 17. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘உனக்காக இருப்பேன்’ பாடல் 2005ஆம் ஆண்டு தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

பின்னர், பையா படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் இவர் பாடிய ‘துளி துளி மழையாய் வந்தாளே’ பாடல் தான் இவருக்கு மிகப் பெரிய ரசிகர்களை பெற்றுத் தந்தது.

இவரது குடும்பமே இசைக் குடும்பம்தான். இவருடைய தாத்தா பி.எஸ்.கணபதி இசைத் துறையில் ஜொலித்தவர். இவரது பாட்டி அலமேலு கணபதி கணிதத்தில் பெற்றிருந்த புலமைக்காக தேசிய விருதை வென்றவர்.

ஹரிசரணின் தந்தை, ஆல் இந்தியா ரேடியோவில் artist ஆக இருந்தார். இவரது தாயார் பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளியில் நூலகராக இருந்தார்.

7 வயதாக இருக்கும்போதே கர்நாடக சங்கீதத்தை கற்றுக் கொள்ளத் தொடங்கினார்.

பாடகர் ஹரிசரண்
பாடகர் ஹரிசரண்

திரைத்துறையில் பல பாடல்களைப் பாடி ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தார். பிப்ரவரி 14 படத்தில் ‘இது காதலா’ பாடல், பாரிஜாதம் படத்தில் ‘உன்னை கண்டேனே’, பட்டியல் படத்தில் ‘போக போக பூமி விரிகிறதே’, உன்னாலே உன்னாலே படத்தில் ‘வைகாசி நிலவே’, கலாப காதலன் படத்தில் ‘மண் மீது’ ஆகிய படங்களில் இவர் பாடிய பாடல் பெரிய ஹிட்டடித்தது.

தேவி ஸ்ரீ பிரசாத், டி.இமான், ஏ.ஆர்.ரகுமான், விஷால் சந்திரசேகர் உள்ளிட்ட பல முன்னணி இசை அமைப்பாளர்களுடன் பயணித்திருக்கிறார் ஹரிசரண்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.