Tamil News  /  Entertainment  /  Lokesh Kanagaraj Speak About How To Handle Music In His Movies
லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்

Lokesh Kanagaraj:லோகியின் ருத்ரதாண்டவ ரைட்டிங்; பின்னால் இருக்கும் ரகசியம்?

19 March 2023, 15:04 ISTKalyani Pandiyan S
19 March 2023, 15:04 IST

லோகேஷ் கனகராஜ் தான் படங்களில் இசையை அணுகும் விதம் குறித்து பேசி இருக்கிறார்.

இன்று தமிழ் சினிமாவின் ஆகப்பெரும் நம்பிக்கையாக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் இயக்குநரான அறிமுகமான அவர் ‘கைதி’ ‘மாஸ்டர்’ ஆகிய படங்களில் உச்சம் தொட்டு விக்ரம் என்ற ப்ளாக் பஸ்டர் வெற்றிப்படத்தை கொடுத்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த படம் 400 கோடிக்கும் மேல் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. லோகேஷ் கனகராஜின் படங்களில் பாடல்களுக்கு பெரிதாக வேலையிருக்காது. ஆனால் பின்னணி இசை தரமானதாக அமைந்து இருக்கும்.

இந்த நிலையில் அண்மையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் இசையை தான் அணுகும் விதம் குறித்தும், தான் எழுதுவதில் பின்னணி இசையின் பங்கு எந்தளவு இருக்கிறது என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.

இது குறித்து லோகேஷ் கனகராஜ் பேசும் போது, “ பாடல்கள் என்றால் தப்பித்து ஓடி விடுவேன். முந்தைய படங்களில் எப்படியெல்லாம் பாடல்கள் வந்திருக்கின்றன என்பதை பார்த்துக்கொண்டிருப்பேன். அதில் ஒவ்வொரு இயக்குரும் பாடல்களை அவர்கள் அணுகும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஜிகர் தண்டா பட டைட்டிலிலேயே இது மியூசிக்கல் கேங்கஸ்டர் ஸ்டோரி என்று போட்டு இருந்தார். அது என்ன என்று பார்க்கச் சென்ற போது, அந்த ஆல்பத்தில் 12 பாடல்கள் இருந்தன. அதன் பின்னர் பின்னணி இசையை தனியாக ரிலீஸ் செய்தார்கள்.

அதுதான் கைதி படத்தில் நான் மியூக்கை அப்படி அணுகுவதற்கு காரணமாக இருந்தது. வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில் வாரியர்ஸ் என்ற ராப் பாடல் ஒன்று இருக்கும். இப்படி எவையெல்லாம் எனக்கு பிடிக்கிறதோ அதிலிருந்து நான் கற்றுக்கொள்வேன்.

பின்னணி இசை இல்லாமல் நான் இதுவரை நான் எழுதியதே இல்லை. தி டார்க் நைட் அல்லது ஹான்ஸ் சிம்மரின் பிண்ணனி இசையானது ஓடிக்கொண்டே இருக்கும். அப்போதுதான் நான் ஐடியாவை பிடித்து எழுத ஆரம்பிப்பேன். 

ஷூட் முடிந்த உடன் அதை  நான் கேட்ட பின்னணி இசையுடன் கனெக்ட் ஆகிறதா என்று பார்ப்பேன். அது கனெக்ட் ஆகிவிட்டது என்றால், நாம் சரியாக சென்று கொண்டிருக்கிறோம் என்று தெரியும். அதற்கான இசையை இசையமைப்பாளரிடம் கேட்டு வாங்கும் போதும் அதை சொல்லியே மியூசிக்கை வாங்குவேன்.” என்று பேசினார்.

டாபிக்ஸ்