Singappenne Serial: தில்லைக்கு தெரியவந்த உண்மை.. மகேஷின் அதிரடி முடிவு.. சபதம் எடுத்த ஆனந்தி-singappenne serial today episode promo update on september 1 2024 indicates thillai came to know truth - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singappenne Serial: தில்லைக்கு தெரியவந்த உண்மை.. மகேஷின் அதிரடி முடிவு.. சபதம் எடுத்த ஆனந்தி

Singappenne Serial: தில்லைக்கு தெரியவந்த உண்மை.. மகேஷின் அதிரடி முடிவு.. சபதம் எடுத்த ஆனந்தி

Aarthi Balaji HT Tamil
Oct 01, 2024 10:05 AM IST

Singappenne Serial: ஆனந்திக்கு லோன் பணம் வாங்கி கொடுத்த விஷயம் மகேஷின் தந்தையான தில்லைக்கு தெரிந்துவிட்டது. இதனால் அவருக்கு கோபம் வந்தது. அத்துடன் மித்ரா தான் அதை போட்டு கொடுத்து இருப்பார் போல.

Singapennae Serial: தில்லைக்கு தெரியவந்த உண்மை.. மகேஷின் அதிரடி முடிவு.. சபதம் எடுத்த ஆனந்தி
Singapennae Serial: தில்லைக்கு தெரியவந்த உண்மை.. மகேஷின் அதிரடி முடிவு.. சபதம் எடுத்த ஆனந்தி

ஆனந்திக்கு லோன் பணம் வாங்கி கொடுத்த விஷயம் மகேஷின் தந்தையான தில்லைக்கு தெரிந்துவிட்டது. இதனால் அவருக்கு கோபம் வந்தது. அத்துடன் மித்ரா தான் அதை போட்டு கொடுத்து இருப்பார் போல. ஏனென்றால் அவர் தான் தில்லை, மகேஷை விசாரிக்கும் போது உடன் இருக்கிறார்.

தில்லை, மகேஷ் வாக்குவாதம்

தில்லை, மகேஷிடம், “ நீ எதற்காக, யாருக்காக இந்த லோன் பணத்தை வாங்கி கொடுத்தாய் என்று சொல்லும் வரை, நான் 1 ரூபாய் கூட கொடுக்க மாட்டேன் “ என்று காட்டமாக சொல்லினார். அதற்கு மகேஷ், “ நீங்க கொடுக்கவில்லை என்றால் அப்போ நான் வேறு கம்பெனிக்கு வேலைக்கு போக வேண்டியது தான் “ என்றார். இதை கேட்டு மித்ரா மட்டும் தில்லை அதிர்ச்சி அடைந்தார்கள்.

முத்து, ஆனந்தியிடம், “ நீங்க யார் போய் சென்று பேசினாலும் இனி அன்பு இங்கு வேலைக்கு வர மாட்டான். “ என்றார். அதற்கு ஆனந்தி, “ நான் சென்று பேசி அவரை மீண்டும் வேலைக்கு வர வைக்காமல் விட மாட்டேன் “ என்றார். இது தொடர்பான காட்சிகள் இன்றைய ( செப் . 30 ) எபிசோடில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

நேற்றைய எபிசோட்

சிங்கப் பெண்ணே சீரியலின் நேற்றைய எபிசோட்டில், அன்பு வேலையை விட்டு செல்கிறேன் என்று கூறிய நிலையில், ஆனந்தி நான் உங்களிடம் அழகனைப் பற்றி அடிக்கடி கேட்பதால் தானே நீங்கள் வேலையை விட்டு செல்கிறீர்கள். நான் இனிமேல் உங்களிடம் அழகனை பற்றி கேட்கவே மாட்டேன் என்று உறுதி அளிக்கிறாள்.

ஆனந்தி முகத்திற்கு நேராக சொல்லிய காயத்ரி

ஆனாலும், அன்பு அதற்கு சமாதானம் ஆகவில்லை. கம்பெனியில் வேலை செய்யும் அனைவரும் அன்பை சமாதனம் செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால் ஒன்றும் வேலைக்கு ஆக வில்லை. காயத்ரி மற்றும் ரெஜினாவிடம், அன்பு வேலையை விட்டு செல்வது குறித்து ஆனந்தி புலம்பினார். அதற்கு காயத்ரி, “ அழகனை பற்றி கேட்டு கொண்டே இருப்பதால் தான், அன்பு வேலையை விட்டு சென்று இருக்க வேண்டும் “ என்று ஆனந்தி முகத்திற்கு நேராக சொல்லிவிட்டார்.

இதற்கிடையே வேலையை விட்டு செல்வதற்கான காரணத்தை அன்புவின் நண்பன் அவனிடம் அதட்டி கேட்டார். முதலில் சொல்ல தயங்கிய அன்பு இறுதியாக கோபம் கொண்டார். மேலும் மகேஷ், ஆனந்தியை காதலிக்கும் விஷயத்தை சொல்லி, அதற்காகத்தான் அங்கிருந்து கிளம்புவதாக கூறுகிறான். இதை முத்து சற்றும் எதிர்பார்க்கவே இல்லை.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.