SINGAPENNE SERIAL: திருடனை அடையாளம் காட்டும் ஆனந்தி.. சிக்குவார்களா மித்ரா, சுயம்புலிங்கம்
SINGAPENNE SERIAL: சிங்கப் பெண்ணே சீரியலின் நேற்றைய எபிசோடில் கோயில் நகை காணாமல் போன நிலையில் அழகப்பன் மேல் பழி விழுந்தது.
SINGAPENNE SERIAL: தமிழ் சின்னத்திரையில், சன் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிங்கப் பெண்ணே. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கோயில் நகை காணாமல் போன நிலையில் அழகப்பன் மேல் பழி விழுந்தது.
இன்றைய ப்ரோமோ
சிங்கப் பெண்ணே சீரியலின் இன்றைய ( ஆகஸ்ட் 27 ) எபிசோட் எபிசோடிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கிறது. அதில் ஆனந்தி, தனது தந்தையிடம் கோயில் நகை திருடி சென்றது யார் என தனக்கு தெரியும் என்று கூறுகிறார்.
தீமிதி திருவிழாவின் போது தனது அண்ணன் வருவார் என நினைத்து அவர் கோயில் அருகே காத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த திருடனை பார்த்தார். உடம்பு முழுவதும் எண்ணெய் தேய்த்துக் கொண்டு வந்த அந்த நபரிடம் எதுவும் பேசாமல் ஆனந்தி சென்றுவிட்டார்.
இதனிடையே சற்று யோசித்துப் பார்த்து ஆனந்திக்கு அவர்கள் தான் கோயில் நகைகளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. அதனால் தான் அந்த தந்தையிடம் அந்த திருடர்களை பார்த்ததாக சொல்லினார். அதற்கு அழகப்பன், இதை ஏன் நீ முன்பே சொல்லவில்லை. முன்பு சொல்லி இருந்தால் பழி நம் மேல் வந்திருக்காது அல்லவா என கேட்டார். அதற்கு ஆனந்தி தனக்கு அப்போது தோன்றவில்லை என்று சொல்லிவிட்டார்.
ஆனந்தி சொன்ன வாக்குமூலம்
மித்ரா, சுயம்பு லிங்கத்துக்கு போன் செய்து, இவ்வளவு பெரிய பிளான் போட்டுவிட்டு எதற்காக இப்படி சொதப்பி விட்டீர்கள் என்று கோபமாக கேட்கிறார். அதற்கு சுயம்புலிங்கம் எந்த பிளான் என்னவானது என்று கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.
மறுபக்கம் ஆனந்தியை அழைத்து கொண்டு மகேஷ் மற்றும் அன்பு காவல் துறையை சந்திக்க சென்றனர். வழியில் பார்த்து அவர்களிடம் ஆனந்தி கோயில் நகைகளை திருடி சென்ற திருடனை பார்த்ததாக வாக்குமூலம் கொடுத்தார். அத்துடன் இன்றைய எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிந்தது.
நேற்றையை எபிசோட்
அழகப்பனை அழைத்து கோயில் நகைகளை கொடுக்கும் படி பூசாரி சொல்கிறார். உள்ளே திறந்து பார்த்தால், எதுவும் இல்லை. அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். அழகப்பன் தான் நகைகளை எடுத்தார் என பேச்சு வருது.
பழி போட்ட சுயம்பு லிங்கம்
ஊர் பஞ்சாயத்து கூடியது. அழகப்பன் நிலைமை சரியில்லை, அவர் தான் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்தினால் நகைகளை திருடி இருக்க வேண்டும் என்று பேசினார்கள். ஆனால் அவரோ, கோயில் நகைகளை எடுத்து, தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழல் ஒரு போதும் இல்லை என சொல்லினார். ஆனால் விடாமல் ஏற்கனவே இருக்கும் கடுப்பினால் அழகப்பன் மேல் சுயம்பு லிங்கம் பழி போட்டு கொண்டே இருந்தார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்