Singapenne Serial: ஆனந்தி எனக்குதான்.. சபதம் ஏற்ற அன்பு.. மகேஷை பந்தாடிய அப்பா.. சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singapenne Serial: ஆனந்தி எனக்குதான்.. சபதம் ஏற்ற அன்பு.. மகேஷை பந்தாடிய அப்பா.. சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Singapenne Serial: ஆனந்தி எனக்குதான்.. சபதம் ஏற்ற அன்பு.. மகேஷை பந்தாடிய அப்பா.. சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Published Sep 03, 2024 07:46 AM IST

Singapenne Serial: இன்னொரு பக்கம் வாட்ச்மேன் அழகனை விட அன்பு தான் உனக்கு சரியான ஆளாக இருப்பாள் என்று கூற, ஆனந்தி அன்பை பார்த்து சிரிக்கிறாள். இத்தகைய நிகழ்வுகள் இன்றைய எபிசோடில் இடம் பெற இருக்கின்றன - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Singapenne Serial: ஆனந்தி எனக்குதான்.. சபதம் ஏற்ற அன்பு.. மகேஷை பந்தாடிய அப்பா.. சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
Singapenne Serial: ஆனந்தி எனக்குதான்.. சபதம் ஏற்ற அன்பு.. மகேஷை பந்தாடிய அப்பா.. சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

சிங்கப் பெண்ணே சீரியலில் நேற்றைய தினம் செவரக்கோட்டையில் இருந்து அனைவரும் சென்னைக்கு கிளம்பினர். இதற்கிடையே மகேஷுக்கு போன் செய்த அவரது அப்பா, உடனடியாக நீ சென்னைக்கு கிளம்பி வர வேண்டும் என்று கட்டளையிட்டார். அதற்கு ஏதாவது சீரியஸா அப்பா என்று மகேஷ் கேட்டதும், இன்னும் கோபமான அவரது அப்பா, இன்னும் 6 மணி நேரத்தில் நீ சென்னையில் இருக்க வேண்டும் என்று கோபமாக பேசினார்.

இதையடுத்து அனைவரும் சென்னைக்கு கிளம்பினர். ஹாஸ்டலுக்கு வந்ததும் மித்ரா அனைவரையும் இடித்து விட்டு உள்ளே சென்றாள். இதைப் பார்த்த வாட்ச்மேன், இவளை வைத்துக்கொண்டு செவரக்கோட்டையில் எப்படி சமாளித்தீர்கள் என்று கேட்க, அங்கு வந்தவர்கள் அவள் எங்கு சென்றாலும் பிரச்சினைதான் என்று கூறினர்.

மகேஷ் காதலிப்பது அன்புக்கு தெரிந்து விட்டது.

ஆனந்தியை மகேஷ் காதலிப்பது அன்புக்கு தெரிந்து விட்டது. இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சோகமாக வந்து அவன் வந்து நின்றான். இதைப் பார்த்த ஆனந்தி, ஏன் சோகமாக இருக்கிறீர்கள் என்று அன்பை கேட்க, ஒன்றுமில்லை என்று சமாளித்தான். இதற்கிடையே அப்பாவை சந்திக்க சென்ற மகேஷை அவரது அப்பா வெளுத்தெடுத்தார்.

உன்னால் கம்பெனிக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. நமது கம்பெனியின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்த ஒரு கம்பெனி, நமது கம்பெனியை விட்டுச் சென்று விட்டது என்று குமுறினார். இதைக்கேட்ட மகேஷ் அதிர்ச்சி அடைந்தான். மேலும் பேசிய அவர், உன்னை நம்பி இனி நான் கம்பெனியை ஒப்படைக்க தயாராக இல்லை. என்னுடைய கம்பெனியை இனி நானே பார்த்துக்கொள்கிறேன் என்றார்.

நீ என்னுடைய சுமையை குறைப்பதற்காகத்தான் கம்பெனி பொறுப்பை எடுத்து இருக்கிறாய் என்று நினைத்தேன். ஆனால் இப்போதுதான் தெரிகிறது. நீ ஆனந்தியை காதலிப்பதற்காகத்தான் இந்த கம்பெனி பொறுப்பை எடுத்திருக்கிறார் என்று சரமாரியாக பேசினார். இதைக்கேட்டு எதுவும் சொல்ல முடியாமல் நின்ற மகேஷ், மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டான். ஆனால் அவரது அப்பா, என்னுடைய கம்பெனியை எப்படி பார்க்க வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்று சொல்லி வேகமாக கிளம்பினார்.

இதற்கிடையே மகேஷ் ஆனந்தியை காதலிப்பதை நினைத்து வருந்தி வீட்டிற்கு சென்று அழுதான். மேலும் ஆனந்திக்கு தான் அனுப்பிய கிஃப்ட் களையெல்லாம் பார்த்து நினைவுகளை நினைத்து கதறிக் கொண்டிருந்தான். இதற்கிடையே அன்பின் மனசாட்சி அவன் முன்னே தோன்றுகிறது. அத்தோடு நேற்றைய எபிசோடு முடிவடைந்தது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: