Singapenne Serial: ஆனந்தி மகேஷூக்குத்தான்; அன்பின் அதிரடி முடிவு;தெருவில் நிற்கும் ஆனந்தி-சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!-singapenne serial today episode on september 27 2024 indicates the thought of alaghan made anandi cry with love - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singapenne Serial: ஆனந்தி மகேஷூக்குத்தான்; அன்பின் அதிரடி முடிவு;தெருவில் நிற்கும் ஆனந்தி-சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Singapenne Serial: ஆனந்தி மகேஷூக்குத்தான்; அன்பின் அதிரடி முடிவு;தெருவில் நிற்கும் ஆனந்தி-சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 27, 2024 07:44 AM IST

Singapenne Serial: “ அழகன் யார் என்ற விஷயத்தை தன்னிடம் கண்டிப்பாக சொல்லவேண்டும் என்று ஆனந்தி அன்புக்கு கட்டளையிட்டு இருந்த நிலையில், அதை கேட்பதற்காக, அவள் அன்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த தருணத்தில்..” - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Singapenne Serial: ஆனந்தி மகேஷூக்குத்தான்; அன்பின் அதிரடி முடிவு;தெருவில் நிற்கும் ஆனந்தி-சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
Singapenne Serial: ஆனந்தி மகேஷூக்குத்தான்; அன்பின் அதிரடி முடிவு;தெருவில் நிற்கும் ஆனந்தி-சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

ஏற்கனவே இன்றைய தினம், அழகன் யார் என்ற விஷயத்தை தன்னிடம் கண்டிப்பாக சொல்லவேண்டும் என்று ஆனந்தி அன்புக்கு கட்டளையிட்டு இருந்த நிலையில், அதை கேட்பதற்காக, அவள் அன்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த தருணத்தில், வேலையை பார்க்காமல் இவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று கோபமடைந்த கருணாகரன், அவள் தலையில் கொட்டு வைத்தான். அதனைத் தொடர்ந்து அன்பு வந்த நிலையில், அனைவரும் அன்பை தயவு செய்து, எங்களை எல்லாம் விட்டுச் செல்லாதீர்கள் என்று கெஞ்சுகிறார்கள். ஆனந்தியும் என்ன செய்வது என்று தெரியாமல் கதறி அழுது கொண்டிருக்கிறாள்.

 

நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன? 

சிங்கப்பெண்ணே சீரியலின் நேற்றைய எபிசோடில், மகேஷின் பணபலமே ஆனந்தியை அவளது எல்லா கஷ்டங்களிலிருந்தும் காப்பாற்றும் என்று நம்பிய அன்பு, அதற்காக ஆனந்தியை மகேஷுக்கு விட்டுக் கொடுக்க துணிந்தான். இதையடுத்து அன்பின் மனசாட்சியான அழகன், அவன் முன் தோன்றி, நீ செய்வது மிக மிக தவறு என்று எச்சரிக்கிறது. 

ஆனாலும், தன்னுடைய மனசாட்சியுடன் வாக்குவாதம் செய்த அன்பு, மகேஷ் தான் ஆனந்திக்கு சரியாக இருப்பார் என்று சொன்னான். அதற்கு அழகன், மகேஷ் தரப்பிலிருந்து மட்டும் நீ யோசிக்கிறாயே, ஆனந்தி யாரை காதலிக்கிறாள் என்ற ரீதியில் நீ ஏன் யோசிக்க மறுக்கிறாய் என்று கேள்வி கேட்கிறது. அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய அன்பு, நீ இங்கிருந்து செல்லவில்லை என்றால், கத்தியை எடுத்து நான் என்னை நானே குத்திக் கொள்வேன் என்று மிரட்ட, உன்னை பார்த்தால் எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது என்று சொல்லி அழகன் அங்கிருந்து கிளம்புகிறது. 

ஆனந்தி கொடுத்த கட்டளை

அதனைத் தொடர்ந்து, அழகன் தொடர்பான எல்லா நினைவுகளையும் அழிக்க வேண்டும் என்று முடிவெடுத்த அன்பு, ஆனந்தி காதல் தொடர்பான அனைத்து நினைவு பரிசுகளையும் தீயில் போட்டு எரிப்பதற்கு ஆயத்தமானான். இந்த நிலையில் தான் திடீரென்று அவனுக்கு ஆனந்தியிடமிருந்து அழைப்பு வந்தது. அப்போது பேசிய ஆனந்தி, தான் தெருவின் முனையில் நிற்பதாகவும், தற்போது நீங்கள் வரவேண்டும் என்றும் கறாராக சொல்ல, வேறு வழியில்லாமல் ஆனந்தியை சந்திக்க சென்றான் அன்பு. 

அப்போது ஆனந்தி நீங்கள் என்ன சொன்னாலும் என்னுடைய மனமானது நந்தா தான் அழகன் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நான் ஆரம்பத்திலேயே அழகன் தொடர்பான நினைவுகளில் இருந்து வெளியே வந்திருப்பேன். ஆனால் நீங்கள் தான் அழகன் இருக்கிறான் என்று உறுதியை கொடுத்து, என்னை ஆசைப்பட வைத்தீர்கள். அப்படி இருக்கும் போது, திடீரென்று அழகன் என்ற ஒருவனே இல்லை என்று சொன்னால், என்னுடைய மனம் என்ன பாடுபடும் என்று யோசித்துப் பாருங்கள். 

நான் அழகன் இருக்கிறான் என்பதை நம்புகிறேன். அந்த அழகன் யார் என்று உங்களுக்கு தெரியும் என்பது எனக்கும் நன்றாகத் தெரியும். இதை நீங்கள் நாளை எனக்கு கம்பெனியில் வைத்து தெளிவுபடுத்த வேண்டும். அழகன் யார் என்ற உண்மையை நீங்கள் சொல்லியே தீர வேண்டும் என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டு கிளம்பினாள். 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.