Singappenne Serial: பணம் ரெடி.. ஆனந்தியை தடுக்க பிளான் போட்ட சுயம்புலிங்கம் - சிங்கப்பெண்ணே சீரியல்-singappenne serial today episode promo on august 20 2024 indicates money got ready - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singappenne Serial: பணம் ரெடி.. ஆனந்தியை தடுக்க பிளான் போட்ட சுயம்புலிங்கம் - சிங்கப்பெண்ணே சீரியல்

Singappenne Serial: பணம் ரெடி.. ஆனந்தியை தடுக்க பிளான் போட்ட சுயம்புலிங்கம் - சிங்கப்பெண்ணே சீரியல்

Aarthi Balaji HT Tamil
Sep 20, 2024 07:38 AM IST

Singappenne Serial: ஆனந்தியையும், அவரின் குடும்பத்தையும் பழி வாங்க துடிக்கும் சுயம்பு லிங்கம், “ ஆனந்தி, சிவரக்கோட்டை மண்ணில் கால் எடுத்து வைப்பதற்குள், அழகப்பன் மாமாவிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்க வேண்டியது உன் கடமை “ என சொல்கிறார்.

Singappenne Serial: பணம் ரெடி.. ஆனந்தியை தடுக்க பிளான் போட்ட சுயம்புலிங்கம் - சிங்கப்பெண்ணே சீரியல்
Singappenne Serial: பணம் ரெடி.. ஆனந்தியை தடுக்க பிளான் போட்ட சுயம்புலிங்கம் - சிங்கப்பெண்ணே சீரியல்

எப்படி இவ்வளவு பணம்

அதை அங்கு இருந்து பார்த்த மித்ரா, “ இவனுக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது. முதலில் இவனை எதாவதது செய்ய வேண்டும் “ என்று மனதிற்குள் திட்டம் போட்டு கொண்டு இருக்கிறார்.

வழக்கம் போல் ஆனந்தியையும், அவரின் குடும்பத்தையும் பழி வாங்க துடிக்கும் சுயம்பு லிங்கம், “ ஆனந்தி, சிவரக்கோட்டை மண்ணில் கால் எடுத்து வைப்பதற்குள், அழகப்பன் மாமாவிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்க வேண்டியது உன் கடமை “ என சொல்கிறார்.

அத்துடன் இன்றைய ( செப் 20 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிவுக்கு வந்தது. முழுவதமாக என்ன நடக்கிறது என்பதை சன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு பார்த்து தெரிந்து கொள்வோம்.

நேற்றைய எபிசோட்

சிங்கப்பெண்ணே சீரியலின் நேற்றைய ( செப் 19 ) எபிசோட்டில் ஆனந்தி நான் அவர்களின் சொந்த நிலத்தை எப்படியாவது மீட்டு கொடுத்துவிடுவேன் என்று என்னை நம்பினாள், ஆனந்தி. ஆனால் என்னால் முடியவில்லை. நான் அவளுக்கு சரியான நபர் இல்லை “ என்று அன்பு வழக்கம் போல் தனது நண்பரிடம் புலம்பி கொண்டு இருந்தார். வங்கியில் அது அவரின் சொந்த நிலம் என தெரிய வந்த காரணத்தினால் ஆனந்தி, அம்மா, மகனை நான் பிரித்துவிட வேண்டாம் என்று சொல்கிறார். 

மகேஷ் கொடுத்த ஷாக்

அந்த நேரம் பார்த்து காரில் எண்டரி கொடுத்த மகேஷ், “ எனக்கு எல்லா விஷயமும் தெரியும் அன்பு. இதில் 10 லட்சம் ரூபாய் பணம் இருக்கிறது. நான் தான் கொடுத்தேன் என்று ஆனந்திக்கு தெரிய கூடாது. என்னுடைய காதல் விஷயத்தில் மற்றவர்களை விட உன்னை நான் ரொம்ப நம்புகிறேன் அன்பு “ என்று அதிர்ச்சி கொடுத்தார் மகேஷ். வாங்கி கொள்ளலாமா? இல்லை அப்படியே சென்று விடலாமா? என்ற குழப்பத்தில் முழித்த படி நின்று கொண்டு இருக்கிறார் அன்பு. பிறகு மகேஷ் எடுத்து சொன்னவுடன் பணத்தை வாங்கி கொண்டார்.

தலை மேல் சத்தியம்

இறுதியாக சரி எப்படியோ பணம் கிடைத்துவிட்டு என மனம் மாறி மகேஷ் கொடுத்த பணத்தை எடுத்து கொண்டு அன்பு, ஆனந்தியை பார்க்க தங்கும் விடுதிக்கு செல்கிறான். அன்பு, “ ஆனந்தி பணம் கிடைத்துவிட்டது” என்று சொல்ல உடனே ஆனந்தி, “ உண்மையில் இந்த பணத்தை உங்கள் நண்பர் தான் கொடுத்தாரா? என் தலை மேல் அடித்து சத்தியம் செய்யுங்கள் என கேட்கிறார். 

சினிமா தொடர்பான பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை தொடர்ந்து பெற இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்!

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.