Singapenne Serial: ஊர் வந்து சேர்ந்த பணம்.. சொக்கு முகத்தில் கரி; அசால்ட் காட்டிய ஆனந்தி; சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்!-singapenne serial today episode on september 21 2024 indicates anbu and anandhi redeemed the mortgaged land - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singapenne Serial: ஊர் வந்து சேர்ந்த பணம்.. சொக்கு முகத்தில் கரி; அசால்ட் காட்டிய ஆனந்தி; சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்!

Singapenne Serial: ஊர் வந்து சேர்ந்த பணம்.. சொக்கு முகத்தில் கரி; அசால்ட் காட்டிய ஆனந்தி; சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 23, 2024 08:40 AM IST

Singapenne Serial: வாக்குவாதத்தில், நிலத்தை அடமானத்திற்கு வாங்கியவன், இன்னும் பத்திரம் என்னுடைய கையில் தான் இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம் என்று எச்சரித்தான் - சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்!

Singapenne Serial: ஊர் வந்து சேர்ந்த பணம்.. சொக்கு முகத்தில் கரி; அசால்ட் காட்டிய ஆனந்தி; சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்!
Singapenne Serial: ஊர் வந்து சேர்ந்த பணம்.. சொக்கு முகத்தில் கரி; அசால்ட் காட்டிய ஆனந்தி; சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்!

நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன? 

சிங்கப்பெண்ணே சீரியலில் நேற்றைய எபிசோடில் அன்பும், ஆனந்தியும் அடமானம் வைத்த நிலத்தை மீட்பதற்காக பணத்தை திரட்டி, காரில் வேக வேகமாக செவரக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். சரியாக செவரக்கோட்டைக்கு பக்கத்தில் வரும் பொழுது, சொக்கலிங்கம் அவர்களை ஊருக்குள் வரவிடாமல் தடுக்க, அவனது ஆட்களை போலீஸ் போல நிற்க வைத்து, பிரச்சினை கொடுக்க வைத்தான். அப்போது அந்த போலி போலீஸ்கள் அவர்கள் வைத்திருந்த பணத்தை பார்த்து விட்டனர். 

தொடர்ந்து, மூன்று லட்சத்திற்கு மேல் காரில் பணத்தை கொண்டு வரக்கூடாது என்று விதி இருக்கும் நிலையில், நீங்கள் 10 லட்சத்தை எப்படி கொண்டு வந்தீர்கள் என்று கேள்வி கேட்டனர். உடனே ஆனந்தி, இதை நாங்கள் எங்கள் நண்பனிடம் கடன் வாங்கி, இங்கே கொண்டு வந்திருக்கிறோம். எங்களது நிலம் அங்கு அடமானத்தில் இருக்கிறது. இந்தப்பணத்தை கொண்டு சென்றால்தான் அந்த நிலத்தை மீட்க முடியும். ஆகையால் எங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டாள். ஆனால் அவர்களோ, இதையெல்லாம் நாங்கள் நம்ப முடியாது என்று சொல்லி, உண்மையைச் சொல்லுங்கள் என்று மிரட்டினர். 

வெளுத்த அன்பு 

ஒரு கட்டத்தில் உங்களுக்கு கடன் கொடுத்ததிற்கான பத்திரம் தானே வேண்டும் என்று சொல்லி, நண்பனுக்கு போன் செய்ய, அந்த போலீஸ்காரர் நீங்கள் காவல் நிலையத்திற்கு வந்து பத்திரத்தை காண்பித்து, பணத்தை எடுத்துச் செல்லுங்கள் என்று சொல்லி பணத்தை எடுத்துச் செல்ல முயன்றார். இந்த நிலையில் அவரிடம் இருந்து அன்பு பணப்பெட்டியை பிடுங்கி ஓட, அவர்களுக்குள் சண்டை மூழ்க்கிறது. ஒரு கட்டத்தில் அவர்கள் போலியான போலீஸ்காரர்கள் என்றும் அவர்கள் சொக்கலிங்கத்தின் ஆட்கள் என்றும் அன்பிற்கு தெரிய வர, அன்பு அனைவரையும் போட்டு பொளந்து எடுக்கிறான். 

இன்னொரு பக்கம் அழகப்பனையும், அவனது குடும்பத்தையும் சொக்கலிங்கமும், நிலத்தை அடமானத்திற்கு கொடுத்தவரும் உங்களிடம் இருந்து பணம் கிடைப்பது மிகவும் கஷ்டம்; ஆகையால், நீங்கள் நிலத்தை எழுதிக் கொடுத்து விடுங்கள் என்று அவசர படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்களோ ஆனந்தி பணத்தோடு வந்து கொண்டிருக்கிறாள். நிச்சயம் உங்களின் பணம் கிடைத்துவிடும் என்று கூறினர். ஆனால், அவர்களோ அது நடப்பது போன்ற அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. ஆகையால் உடனே வந்து நீங்கள் கையெழுத்து போட்டு கொடுங்கள் என்று மீண்டும் அவசரப்படுத்தினர். 

இந்த நிலையில் உள்ளே நுழைந்த ஆனந்தியின் அம்மா காலக்கெடுவானது இன்று இரவு வரை இருக்கும் நிலையில், நீங்கள் ஏன் இவ்வளவு அவசரப்படுத்துகிறீர்கள், ஒருவேளை இன்றைக்குள் எங்களால் பணத்தை கட்ட முடியவில்லை என்றால், நாளை என் கணவர் உங்களிடம் நேரடியாக வந்து கையெழுத்து போட்டு கொடுத்து விடுவார் என்று கூறினார். மற்றொரு பக்கம், சண்டை முடிந்து, அன்பும் ஆனந்தியும் பணத்தை எடுத்து செவரக்கோட்டைக்கு குறுக்கு வழியில் ஓடி வந்து கொண்டிருந்தனர். அத்தோடு நேற்றைய எபிசோடு முடிவடைந்தது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.