தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ht Tamil Exclusive: அடேங்கப்பா.. பிரியங்கா, ரேஷ்மா சம்பளம் என்ன கேட்டீங்களா?

HT Tamil Exclusive: அடேங்கப்பா.. பிரியங்கா, ரேஷ்மா சம்பளம் என்ன கேட்டீங்களா?

Aarthi V HT Tamil
Feb 15, 2023 11:02 AM IST

சீதா ராமன் சீரியல்களில் நடிக்கும் பிரியங்கா மற்றும் ரேஷ்மாவின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

பிரியங்கா, ரேஷ்மா
பிரியங்கா, ரேஷ்மா

ட்ரெண்டிங் செய்திகள்

மேலும் ஜீ தமிழ் தொலைகாட்சி தொடர்ந்து புதுப்புது சீரியல்களை களமிறக்கி வரும் பிப்ரவரி 20 முதல் சீதா ராமன் என்ற புத்தம் புதிய சீரியல் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

இந்த சீரியலில் பிரியங்கா நல்காரி நாயகியாக நடிக்க ஜூஜி நாயகனாக நடிக்க உள்ளார். மேலும் ரேஷ்மா பசுபுலேட்டி நாயகனின் அம்மாவாக நடிக்க பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்க உள்ளனர்.

அழகு என்றால் வெறும் வெளித்தோற்றம் மட்டும் என உறுதியாக நம்பும் மகாலட்சுமி எதிர்பாராத விதமாக மருமகளாக நுழையும் சீதா உண்மையான அழகு எது என மகாலட்சுமிக்கு புரிய வைப்பாளா? இல்லையா? என்பது தான் இந்த சீரியலின் கதைக்களமாக இருக்க உள்ளது. அத்திடன் புதிதாக திருமணமான பெண்கள் தங்கள் மாமியார் வீட்டில் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அவர் எப்படி எதிர்கொள்கிறது என்பதும் கதை.

தற்போது இந்த சீரியல் வரும் பிப்ரவரி 20 முதல் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இதில் நடிக்கும் பிரியங்கா மற்றும் ரேஷ்மா ஆகியோர் ஒரு நாளுக்கு வாங்கும் சம்பவம் குறித்த தகவல் நமக்கு கிடைத்து இருக்கிறது. அதன்படி இருவருக்கும் ஒரு நாள் மட்டும் 20, 000 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் , இதர சேலவுகளையும் சீதா ராமன் தயாரிப்பு நிறுவனம் வழங்குகிறது.

பிரியங்கா மற்றும் ரேஷ்மா
பிரியங்கா மற்றும் ரேஷ்மா

முன்னாக ரோஜா சீரியலில் பிரியங்கா ஒரு நாளுக்கு ரூ. 15 ஆயிரம் சம்பளமாக பெற்று வந்தார். அதே போல் ரேஷ்மா விஜய் தொலைக்காட்சி சிரீயலில் ஒரு நாளுக்கு ரூ. 15 ஆயிரம் சம்பளமாக பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சீதா ராமன் சிரீயல் காரணமாக இந்த நேரத்தில் ஒளிப்பரப்பாகி வந்த நினைத்தாலே இனிக்கும் சீரியல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் வரும் திங்கள் முதல் மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பழைய படி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்