“4 ½ வருஷம் கோமாவுலதான் இருக்கா.. ஆசை அதிகமா பட்டா கஷ்டத்தையும் ஏத்துக்கிட்டுதான் ஆகணும்..” - சத்யராஜ் எமோஷனல்!
கிட்டத்தட்ட நான்கரை வருடங்களாக அவர் கோமாவில் தான் இருக்கிறார். ஆனால் எல்லாம் சேர்ந்ததுதானே வாழ்க்கை. நான் என்னுடைய குடும்பத்துடன் நிறைய நேரம் செலவழிக்கிறேன். - சத்யராஜ்!

நடிகர் சத்யராஜின் மகள் அண்மையில் தன் அம்மா கிட்டத்தட்ட 4 வருடங்களாக கோமாவில் இருப்பதாக கூறிய நிலையில், அது குறித்து சத்யராஜ் கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
டேக் இட் ஈசி பாலிசி
இது குறித்து அவர் பேசும் போது, “ஒரு தராசில் ஆசை அதிகமாக இருந்தால், துன்பமும் அதிகமாகத்தான் இருக்கும். ஆசை குறைந்து விட்டால், துன்பமும் குறைந்துவிடும். நாம் ஆசைப்படுவது நம்முடைய இஷ்டம். அது நிறைவேறுமா? இல்லை நிறைவேறாதா என்பது நமது கையில் இல்லை.
ஒரு படத்தில் நாம் நடிக்கிறோம். அந்த படம் ஓடுமா ஓடாதா என்பது நமக்கு தெரியாது; காரணம் என்னவென்றால், அதனுடன் வெளியாகும் திரைப்படங்கள் எப்படியான திரைப்படங்களாக இருக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆகையால் எதுவும் நம் கையில் இல்லை. ஆகையால் டேக் இட் ஈசி என்ற பாலிசியில் நாம் நம்முடைய வாழ்க்கையை எடுத்துக் கொண்டு சென்று கொண்டே இருக்க வேண்டியதுதான்.