வகுப்பு மாறி உட்கார வைத்த நண்பன்; காட்டிக்கொடுத்த ‘நாளைய தீர்ப்பு’.. வாட்டி எடுத்த வாத்தியார் - சம்பவம் செய்த விஜய்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  வகுப்பு மாறி உட்கார வைத்த நண்பன்; காட்டிக்கொடுத்த ‘நாளைய தீர்ப்பு’.. வாட்டி எடுத்த வாத்தியார் - சம்பவம் செய்த விஜய்!

வகுப்பு மாறி உட்கார வைத்த நண்பன்; காட்டிக்கொடுத்த ‘நாளைய தீர்ப்பு’.. வாட்டி எடுத்த வாத்தியார் - சம்பவம் செய்த விஜய்!

Kalyani Pandiyan S HT Tamil
Oct 25, 2024 08:13 PM IST

நண்பனுக்காக வகுப்பு மாறி உட்காந்த விஜயை அந்த வகுப்பாசிரியர் ‘நாளைய தீர்ப்பு’ படம் மூலம் கண்டுபிடித்து கனகச்சிதமாக தூக்கி விட்டார் - சஞ்சீவ்!

வகுப்பு மாறி உட்கார வைத்த நண்பன்; காட்டிக்கொடுத்த ‘நாளைய தீர்ப்பு’.. வாட்டி எடுத்த வாத்தியார் - சம்பவம் செய்த விஜய்!
வகுப்பு மாறி உட்கார வைத்த நண்பன்; காட்டிக்கொடுத்த ‘நாளைய தீர்ப்பு’.. வாட்டி எடுத்த வாத்தியார் - சம்பவம் செய்த விஜய்!
விஜய்
விஜய்

அதனைத்தொடர்ந்து கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய நடிகர் விஜய், தன்னுடைய கட்சியின் முதல் மாநாடை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை மறுநாள் (அக்டோபர் 27 -2024) நடத்த இருக்கிறார். இதில், அவரது கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகள் உள்ளிட்ட பலவை அடங்கும் என்பதால், அதற்கான எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் மேலோங்கி இருக்கிறது. இனி வாழ்க்கையின் சீரியஸான பாதையில் பயணிக்கப்போகும் விஜயை இனி திரையில் பார்க்க முடியாது என்ற சோகம், அவரது ரசிகர்கள் மத்தியில் மூச்சு முட்ட நிறைந்திருக்கும் நிலையில், அவரின் சில மகிழ்வான தருணங்களை இங்கு பார்க்கலாம்.

விஜய்
விஜய் (flicker photos)

வகுப்பு மாறி உட்கார்ந்த விஜய்!

முன்னதாக காஃபி வித் அனு நிகழ்ச்சியில் வீடியோ வழியாக விஜய் குறித்து பேசிய அவரது நெருங்கிய நண்பரும், சீரியல் நடிகருமான சஞ்சீவ் “அது எங்களுடைய கல்லூரி காலம். எங்களுடைய குரூப்பில் நான், விஜய், ஸ்ரீநாத் மூன்று பேரும் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துக் கொண்டிருந்தோம். இன்னும் சிலர் வேறு சில படிப்புகளை படித்துக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் மதிய உணவு முடித்த பின்னர், குரூப்பில் இருந்த ராம், நீங்கள் அடுத்த வகுப்பில் எங்களுடன் பிகாம் வகுப்பில் வந்து உட்காருங்கள் என்றான். நாங்களும் சரி ஆசைப்படுகிறானே என்று சொல்லி, மூன்று பேரும் பிகாம் வகுப்பில் சென்று உட்கார்ந்து விட்டோம். அந்த சமயத்தில் தான் ‘நாளைய தீர்ப்பு’ படம் சம்பந்தமான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.

விஜய்
விஜய்

இதனால் சில புத்தகங்களில் விஜயினுடைய புகைப்படங்கள் போஸ்டர்களாக வெளிவந்திருந்தன. வகுப்பு எடுத்துக் கொண்டிருந்த வாத்தியார், ஒரு கட்டத்தில் விஜயை திடீரென்று பார்த்து… டேய் உன்னை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேனே.. என்று யோசித்தவர்..போஸ்டரில் பார்த்ததை நியாபகப்படுத்தி, அவன் பிகாம் வகுப்பைச் சேர்ந்தவன் இல்லை என்பதை கண்டு பிடித்து விட்டார்.

 

தொடர்ந்து விஜயை எழுந்து நில் என்றவர், வேண்டுமென்றே இப்படி வந்து உட்கார்ந்திருக்கிறாயா? உன்னை மேல் இடத்தில் சொல்லி சஸ்பெண்ட் செய்கிறேன் பார் என்று சொல்லி.. காச்.. மூச்.. என்று கத்த ஆரம்பித்து விட்டார். முதலில் அமைதியாக அதனைக் கேட்டுக்கொண்டிருந்த விஜய், ஒரு கட்டத்தில் இங்கு நான் மட்டும் வரவில்லை என்னுடன் சேர்ந்து என்னுடைய இரண்டு நண்பர்களும் வந்திருக்கிறார்கள் என்று என்னையும், ஸ்ரீநாத்தையும் மாட்டி விட்டு விட்டான். அந்த சம்பவத்தை எங்களால் மறக்கவே முடியாது” என்றான்.

அதே நிகழ்ச்சியில் விஜயின் பள்ளி ஆசிரியர் பேசும் போது, “ பள்ளியில் படிக்கும் போதே அவன் கூச்ச சுபாவம் கொண்ட பையன்தான். ஆனால் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நின்று கவனிப்பான். படிப்பிலும் நன்றாக படித்துக்கொண்டிருந்தான். கிட்டார் நன்றாக வாசிப்பார். விளையாட்டிலும் தேர்ந்த பையனாக இருந்தான். மிக நன்றாக ஓவியமும் வரைவான்” என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.