தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Samantha Ruth Prabhu Has Shown Off Her Muscle In A New Picture

Samantha: எனது வலிமையை பார்த்தீர்களா? புகைப்படம் மூலம் சமந்தா பதிலடி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 18, 2023 12:32 PM IST

எப்போதும் தன் மீதான விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்து நேரத்தை செலவிடாமல், புகைப்படம்,விடியோ என குறியீடு மூலம் பதில் அளிப்பதை வழக்கமாக கடைப்பிடித்து வரும் நடிகை சமந்தா, தான் பலவீனமாக இருப்பதாக குறிப்பிட்ட பிரபல ஊடகத்துக்கு, வலிமையாக இருக்கும் தனது உடற்கட்டு புகைப்படத்தை பகிர்ந்து பதில் அளித்துள்ளார்.

உடல் வலிமை குறித்து இன்ஸ்டா ஸ்டோரியில் புகைப்படம் பகிர்ந்த சமந்தா
உடல் வலிமை குறித்து இன்ஸ்டா ஸ்டோரியில் புகைப்படம் பகிர்ந்த சமந்தா

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த புகைப்படத்தை சமந்தாவின் பிட்னஸ் ட்ரெய்னர் ஜூனைத் ஷேக் என்பவர் கிளிக்கியுள்ளார். இந்த புகைப்படத்தில் கேப்ஷனாக, " அவ்வளவு மென்மையாக ஒன்றும் இல்லை. என்னால் முடியும் என்றால் உங்களாலும் முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சமந்தா பகிர்ந்த இன்ஸ்டா ஸ்டோரி
சமந்தா பகிர்ந்த இன்ஸ்டா ஸ்டோரி

கடந்த சில நாள்களுக்கு முன் சகுந்தலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டின்போது வெளியான சமந்தாவின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சமந்தா உடல் எடை குறைத்தும், அவரது முகமும் முன்பு இருந்த பொலிவு இல்லாமல் இருப்பதாகவும் பிரபல ஊடகம் டுவிட்டரில் அவரது புகைப்படத்தை பகிர்ந்து கருத்து பதிவிட்டது.

அத்துடன், விவாகரத்துக்கு பின் சினிமா வாழ்க்கையில் வலுவானவராக வருவார் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மயோசிடிஸ் நோய் பாதிப்பு அவரை மேலும் பலவீனமானவராக ஆக்கியுள்ளது என்று குறிப்பிட்டது.

இதற்கு டுவிட்டரிலேயே பதில் அளித்த சமந்தா, "எனக்கு நிகழ்ந்தது போல் உங்களுக்கு மாதக்கணக்கில் சிகிச்சை மற்றும் மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை வரக்கூடாது என பிரார்திக்கிறேன். நீங்கள் பொலிவு பெறுவதற்காக என அன்பை உங்களுக்காக உரிதாக்குகிறேன்" என்று குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து தற்போது தான் வலிமை இழக்கவில்லை என்பதை தனது ஸ்டைலில், உடற்கட்டின் வலிமை காட்டும் விதமாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உடல்நிலை குறித்து எழுந்து வரும் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னதாக, சமந்தாவின் உடல்நிலை குறித்து பகிரப்பட்ட ஊடகத்தினரின் கருத்துக்கு, அவருக்கு ஆதரவு அளிக்கும் விதமாக பாலிவுட் நடிகர் வருண் தவானும் டுவிட் செய்திருந்தார். அதில், " நீங்கள் எதை பற்றியும் தவறாக உணராமல், உங்களுக்கு கிடைக்க வேண்டிய கவனம் பற்றி மட்டுமே அக்கறை கொள்ளும் உங்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது. பொலிவை இன்ஸ்டாவிலுள்ள பில்டர்கள் மூலமே பெறலாம். சமந்தாவை நான் நேரில் சந்தித்தேன். நான் சொல்வதை நம்புங்கள், அவர் பொலிவுடனே இருக்கிறார்" என்று டுவிட் செய்தார்.

சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் சகுந்தலம் திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கும் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

IPL_Entry_Point

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்