தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Salaar Box Office: மூன்று படங்களின் சாதனைகளை முறியடித்த சலார்.. முதல் நாள் வசூல் என்ன?

Salaar Box Office: மூன்று படங்களின் சாதனைகளை முறியடித்த சலார்.. முதல் நாள் வசூல் என்ன?

Aarthi V HT Tamil
Dec 23, 2023 12:00 PM IST

சலார் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சலார்
சலார்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த படம் முதல் நாளில் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்துள்ளது. பல வெற்றிப் படங்களை முறியடித்து முதல் நாளில் அதிக வசூல் சாதனை படைத்த படமாக 'சலார்' மாறி இருக்கிறது. இந்த வருடம் வெளியான அனைத்துப் படங்களிலேயே 'சலார்' படம் தான் முதல் நாள் வசூல் அதிகமாக வாரி குவித்து உள்ளது.

பாசிட்டிவ் டாக் மூலம் சாதனைகளை முறியடித்து இருக்கிறது இந்த படம். ஏனென்றால் படம் அந்த ரேஞ்சில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். 2023 ஆம் ஆண்டு வெளியான அனைத்துப் படங்களிலும் முதல் நாளில் அதிக வசூல் செய்த படங்கள் 'அனிமேல்', 'ஜவான்', 'பதான்'. 

தற்போது 'சலார்' படம் அந்த மூன்று படங்களையும் முறியடித்து அதிக ஓப்பனிங் டே வசூல் சாதனை படைத்துள்ளது. 

'பாகுபலி' படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்த மூன்று படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெறவில்லை. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் ‘சலார்’ மீது தான் இருக்கிறது. இதனால் பல ரசிகர்களும், திரையுலக ஆர்வலர்களும் இப்படத்தை முதல் நாளே பார்க்க விரும்பினர். 

இது முன்பதிவு மற்றும் முதல் நாள் வசூலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தொழில் வல்லுநர்கள் கருதுகின்றனர். நாடு முழுவதும் 'சலார்' படம் முதல் நாளில் ரூ.95 கோடி வசூலித்துள்ளதாக சினி வட்டாரங்களில் பரவி வருகிறது. தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் மட்டும் இந்தப் படங்களின் வசூல் ஒரு ரேஞ்சில் இருக்கிறது. 

இரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் சேர்த்து 'சலார்' படம் முதல் நாளில் ரூ.70 கோடி வசூலித்துள்ளது. முதல் நாளே படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் முன் வந்தனர்.இரண்டு தெலுங்கு மாநிலங்களில் உள்ள திரையரங்குகள் கிட்டத்தட்ட 88.93 சதவீதம் நிரம்பியிருந்தன.

தெலுங்கு மாநிலங்கள் மட்டுமின்றி.. கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களிலும் 'சலார்' படத்தின் ஓப்பனிங் டே வசூல் நன்றாக உள்ளது. கர்நாடகாவில் ரூ.12 கோடியும் , கேரளாவில் ரூ.5 கோடியும் வசூல் செய்துள்ளது. 'சலார்' முறியடித்த சாதனைகளைப் பொறுத்தவரை, 

ஷாருக்கான் நடித்த 'பதான்' திரைப்படம் இந்திய அளவில் ரூ.57 கோடிகளை முதல் நாள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதையடுத்து  'ஜவான்' ரூ.75 கோடியை ஓப்பனிங் டே வசூல் செய்துள்ளது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்