தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Rudhran Review Starring Raghava Lawrence, R. Sarathkumar, Priya Bhavani Shankar, Poornima Bhagyaraj

Rudhran Review: ‘பைட் இருக்கீ.. டான்ஸ் இருக்கீ.. கதை இருக்கா? ருத்ரன் விமர்சனம்!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 14, 2023 10:32 AM IST

ஒரு கமர்ஷியல் படத்திற்கான அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கின்றன. ஆக்ஷனை தவிர அனைத்தும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது.

ருத்ரன் போஸ்டர்
ருத்ரன் போஸ்டர்

ட்ரெண்டிங் செய்திகள்

தன் குடும்பத்தை தீர்த்துக் கட்டிய வில்லனையும் அவனது ஆட்களையும் கதாநாயகன் பழி வாங்கும் பழைய கதையே ருத்ரன். எதற்காக? ஏன்? என்பது மீதிக்கதை!

எமோஷன், ஆக்ஷன், ரொமான்ஸ், டான்ஸ், அம்மா சென்டிமென்ட் என எல்லாம் இருக்கும் கமர்ஷியல் ஹீரோவாக ராகவா லாரன்ஸ். வழக்கம் போல எல்லாவற்றிலும் நன்றாகவே நடித்து இருக்கிறார். என்ன ஆக்ஷனில் மட்டும் ஓவர் டோஸ்.

பிரியா பவானி ஷங்கரின் காதலும், எமோஷனும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அம்மாவாக பூர்ணிமா பாக்யராஜ். சென்டிமென்ட் பகுதிக்கு கனகச்சி தமான தேர்வு. லாரன்ஸ் மற்றும் அவருக்கு இடையேயான காட்சிகள் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கின்றன.

மகள் சென்டிமென்ட் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. நண்பனாக காளி வெங்கட் வெளிப்படுத்தி நடிப்பு இருக்கும் ரெகுலர் ஃப்ரண்டுக்கான நடிப்பு. வில்லன் சரத்குமார் நடிப்பு மிரட்டல்.

ஒரு கமர்ஷியல் படத்திற்கான அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கின்றன. ஆக்ஷனை தவிர அனைத்தும் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. தயாரிப்பாளராக பல படங்களை தயாரித்த கதிரேசன் படத்தின் காட்சிகளை நன்றாகவே எதிர்கொண்டு இருக்கிறார். ஜிவி இசை ஓகே ரகம். ஆனால் படத்தில் வேறு எந்த புதுமையும் இல்லை. ஆக்ஷன் என்ற பெயரிலும், மாஸ் வசனம் என்ற பெயரிலும் அமைந்திருக்கும் காட்சிகள் கிரிஞ்ச் வகையறாவை சேர்ந்தவை.எதையும் எதிர்பார்க்காமல் வந்தால், ஒரு ஞாயிற்றுக்கிழமை ஃபேமிலியோடு பார்க்கலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்