சல்மான்கானிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்.. ஜாம்ஷெட்பூரில் பதுங்கி இருந்த குற்றவாளியை கைது செய்த போலீசார்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சல்மான்கானிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்.. ஜாம்ஷெட்பூரில் பதுங்கி இருந்த குற்றவாளியை கைது செய்த போலீசார்!

சல்மான்கானிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்.. ஜாம்ஷெட்பூரில் பதுங்கி இருந்த குற்றவாளியை கைது செய்த போலீசார்!

Divya Sekar HT Tamil
Oct 24, 2024 08:13 AM IST

மர்ம நபர் ஒருவர் மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினார். அதில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் ரூ.5 கோடி தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

சல்மான்கானிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்.. ஜாம்ஷெட்பூரில் பதுங்கி இருந்த குற்றவாளியை கைது செய்த போலீசார்!
சல்மான்கானிடம் ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்.. ஜாம்ஷெட்பூரில் பதுங்கி இருந்த குற்றவாளியை கைது செய்த போலீசார்! (HT_PRINT)

ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்

இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினார். அதில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் ரூ.5 கோடி தர வேண்டும் என கூறப்பட்டிருந்தது. மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் ஹெல்ப்லைனிற்கு இந்த மிரட்டல் செய்தி வந்தது, இந்த மிரட்டல் செய்தி வந்ததையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோயுடனான விவகாரங்களைத் தீர்க்க ரூ .5 கோடி செலுத்தாவிட்டால், கொல்லப்பட்ட என்.சி.பி தலைவர் பாபா சித்திக்கை விட மோசமான விதியை சல்மான் கான் சந்திக்க நேரிடும் என்று அந்நபர் சல்மான் கானை எச்சரித்திருந்தார்.

மோசமான விதியை சந்திப்பார்

லாரன்ஸ் பிஷ்னோயுடனான பகையை முடிவுக்கு கொண்டு வர சல்மான் கான் உயிருடன் இருக்க விரும்பினால் ரூ.5 கோடி செலுத்த வேண்டும். இல்லையெனில், அவர் பாபா சித்திகியை விட மோசமான விதியை சந்திப்பார் என்று அக்டோபர் 17 அன்று மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் அடிப்படையிலான ஹெல்ப்லைன் எண்ணில் குற்றம் சாட்டப்பட்டவர் அனுப்பிய செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீசார் விசாரணை தொடங்கியவுடன், போக்குவரத்து போலீஸ் ஹெல்ப்லைனுக்கு அதே எண்ணில் இருந்து மற்றொரு செய்தி வந்தது, முந்தைய செய்தி தவறுதலாக அனுப்பப்பட்டதாகக் கூறியது.

இது தொடர்பாக வொர்லி போலீஸ்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து வாடஸ்ஆப் எண் மூலம் மிரட்டல் விடுத்த நபரை தேடி வந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய குழுக்கள் அனுப்பப்பட்டன. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷட்பூரில் குற்றவாளி பதுங்கியிருப்பதை அறிந்து அவரை கைது செய்தனர். அவன் மும்பையைச் சேர்ந்த ஷேக் ஹூசைன் என்பது தெரியவந்தது. அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜாம்ஷெட்பூரில் பதுங்கி இருந்த குற்றவாளி

முன்னதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடமிருந்து கானுக்கு கொலை மிரட்டல்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடிகரின் பாந்த்ரா வீட்டிற்கு வெளியே கும்பலின் சந்தேகத்திற்குரிய உறுப்பினர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதாவது பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள இவர வீடு முன் ஏப்ரல் 14ஆம் தேதி அதிகாலை அவர் வீடு அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில் சல்மான் கானை கொலை செய்ய சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ரூ.25 லட்சம் பேரம் பேசியதாக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.