அஞ்சலி செலுத்த வந்த புஸ்ஸி ஆனந்த்.. ஆவேசமான தவெக தொண்டர்களின் உறவினர்கள்.. திருச்சியில் திக் திக் திக்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  அஞ்சலி செலுத்த வந்த புஸ்ஸி ஆனந்த்.. ஆவேசமான தவெக தொண்டர்களின் உறவினர்கள்.. திருச்சியில் திக் திக் திக்!

அஞ்சலி செலுத்த வந்த புஸ்ஸி ஆனந்த்.. ஆவேசமான தவெக தொண்டர்களின் உறவினர்கள்.. திருச்சியில் திக் திக் திக்!

Published Oct 28, 2024 07:11 PM IST Stalin Navaneethakrishnan
Published Oct 28, 2024 07:11 PM IST

  • தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேற்று விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக திருச்சியில் இருந்து தமிழக வெற்றிக்கழக தொண்டர்களுடன் சென்ற இளைஞர் அணி தலைவர் சீனிவாசன் மற்றும் இளைஞர் அணி துணை செயலாளர் உறையூர் கலை ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இன்று திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சி உறையூரில் உள்ள கலை அவர்களின் இல்லத்திற்கு நேரில் வந்து மாலை அணிவித்து கண் கலங்கியபடி அஞ்சலி செலுத்தினார். உறையூர் கலையின் உறவினர்களும் கதறி அழுதனர். அதன் பின் அங்கிருந்து திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள இளைஞரணி செயலாளர் சீனிவாசனின் இல்லத்திற்கு புஸ்ஸி ஆனந்த் புறப்பட்டு சென்றார். முன்னதாக உறையூர் கலையின் உறவினர்கள் பல ஆண்டுகளாக விஜய்யின் ரசிகராக இருந்த கலை நேற்று அவரது மாநாட்டிற்கு செல்லும் பொழுது விபத்தில் உயிரிழந்தார். இச்செய்தியை கேள்விப்பட்ட விஜய் ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்றும், இவர் முதலமைச்சராகி என்ன செய்யப் போகிறார் என கேள்வி கேட்டனர். மாநாட்டில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவில்லை என குற்றம் சாட்டினர். விஜய்க்காகவே தனது வாழ்நாளை இழந்த அவரது ரசிகர்களுக்கு தமிழக வெற்றி கழகம் தரப்பிலிருந்து எந்தவித ஆறுதலோ நிதி உதவியோ செய்யவில்லை என அவர்கள் கோபத்துடன் பேட்டி அளித்தனர். பின்னர் பேட்டியளித்த புஸ்ஸி ஆனந்த் , இவர்கள் இருவரின் உயிரிழப்பு கழகத்திற்கு பேரிழப்பு என்றும் அவர்கள் இருவரது குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக வெற்றி கழகம் செய்யும் என்றார். மாநாட்டில் ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை என கேட்டதற்கு அதற்காகத்தான் நான் நேரில் வந்துள்ளேன் என கூறினார்.

More