தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss 7 Tamil : பெண்ணுக்கு ஆண் நண்பர் இருக்க கூடாத? அவர்களை பற்றி எனக்கு நல்லா தெரியும்.. ரவீனா அம்மா ஓபன் டாக்!

Bigg Boss 7 Tamil : பெண்ணுக்கு ஆண் நண்பர் இருக்க கூடாத? அவர்களை பற்றி எனக்கு நல்லா தெரியும்.. ரவீனா அம்மா ஓபன் டாக்!

Divya Sekar HT Tamil
Dec 26, 2023 12:03 PM IST

ஏன் மணி அந்த ரியாக்‌ஷன் கொடுத்தான் என தெரியவில்லை. என்னை பார்த்து ஏன் பயப்பட்டான் என்பது புரியவில்லை என ரவீனா அம்மா தெரிவித்துள்ளார்.

 ரவீனா அம்மா ஓபன் டாக்
ரவீனா அம்மா ஓபன் டாக்

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால் அவர்கள் அதனையெல்லாம் காது கொடுத்து கேட்கவில்லை. இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்குள் வரும் டாஸ்க் கடந்த வாரம் நடந்தது. இதில் மணியின் அம்மா நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்தார். அப்போது ரவீனா அவரிடம் தன்மையாக பேச முயன்றார். தொடர்ந்து அம்மாவை தனியாக கூப்பிட்டு பேசிய மணி, ரவீனாவை பற்றி ஏதாவது கேட்டார்களா? என்று கேட்க, அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை என்று சொன்னார்.

ஆனால், பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ரவீனா குடும்பம் அதனை வேறு மாதிரியாக அணுகியது. உன்னை அறைந்து இருப்பேன். உன்மேல் எனக்கு அவ்வளவு கோபம் வந்தது. அம்மா எல்லாவற்றுக்கும் ஒத்துக்கொண்டார்களா?.. எல்லோரிடம் அம்மா ஒத்துக்கொண்டார்.. ஒத்துக்கொண்டார்.. என்று சொல்லிக்கொண்டு இருக்கிறாய். அவருக்காக நீ இங்கு விளையாட வரவில்லை. அவர் நமக்கு தேவை கிடையாது என்றார். தனியாக உட்காருவதற்காக இருவரும் நிகழ்ச்சிக்கு வந்தீர்கள். தொடர்ந்து மணியிடம், அவளை தனியாக கூப்பிட்டு வைத்து பேசுவதை தயவு செய்து செய்யாதீர்கள் என்று கறாராக கண்டிஷன் போட்டு இருக்கிறது ரவீனா குடும்பம்.

அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை கமல் எபிசோடில் ரவீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக ரவீனாவின் அம்மா லதா ஸ்டோர் ரூமில் காத்திருந்தார். ரவீனாவுக்கு அம்மாவை பார்த்ததும் சந்தோஷம் தாங்க முடியவில்லை. ஆனால் ரவீனாவின் அம்மாவை பார்த்ததும் மணியின் முகம்தான் பயத்தில் மாறிவிட்டது.

மிகவும் அன்புடன் அனைவருடனும் பழகிய ரவீனாவின் அம்மா ரவீனாவுக்கு எந்த ஒரு கண்டிஷனும் போடவில்லை. அட்வைஸும் கொடுக்கவில்லை. யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல் விளையாடு, யாரையும் காயப்படுத்தாதே என்பதை மட்டும்தான் மகளிடம் அவர் சொன்னாரே தவிர மணி பற்றி ஒரு வார்த்தை கூட ரவீனாவிடம் பேசவில்லை. மிகவும் கூலாகவும்.

இந்நிலையில் இதுகுறித்து ரவீனாவின் அம்மா தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்,” ஏன் மணி அந்த ரியாக்‌ஷன் கொடுத்தான் என தெரியவில்லை. என்னை பார்த்து ஏன் பயப்பட்டான் என்பது புரியவில்லை. எனக்கு இருவர் பற்றியும் நன்கு தெரியும். நான் தான் இருவருக்கு வீடியோ எடுப்பேன். ஒரு ஆணுக்கு ஆண் மட்டும் தான் நெருங்கிய நண்பனாக இருக்க முடியுமா? ஏன் பெண்ணுக்கு ஆண் நண்பர் இருக்க கூடாத என கேள்வி எழுப்பினார். மக்களில் ஒரு சிலர் சொல்லும் கருத்துக்கு நான் அவர்களை கேள்வி கேட்கமாட்டேன். அவர்கள் பற்றி எனக்கு நன்றாக தெரியும்” எனக் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்