விஜய்யால் ராஷ்மிகாவிற்கு வந்த பிரச்சனை.. சாரி கேட்டும் விடாத நெட்டிசன்கள்.. என்ன தான் ஆச்சு!
தான் தியேட்டரில் பார்த்த முதல் படம் கில்லி. அந்தப் படத்தை பார்த்ததில் இருந்து விஜய்யை காதலிக்கிறேன். அது ரீமேக் படம் எனக் கூறியதால் நெட்டிசன்களால் ட்ரோலுக்கு உள்ளாகி உள்ளார்.
ராஷ்மிகா மந்தனா கர்நாடக மாநிலம் கூர்க்கை சேர்ந்தவர். மாடலிங் துறையில் பணியாற்றி வந்த இவர் 2016ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி எனும் கன்னட படத்தில் நடித்ததன் மூலம் சினிமாத் துறைக்குள் என்ட்ரி கொடுத்தார்.
இதையடுத்து, அவர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி சினிமாக்களில் நடித்து வருகிறார். மக்கள் இவரை நேஷனல் க்ரஷ் என செல்லமாகவும் அழைத்து வருகின்றனர். இவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ள நிலையில், விஜய்யை பற்றி பெருமையாக பேசி தற்போது ட்ரோலுக்குள் சிக்கி உள்ளார்.
நான் பார்த்த முதல் படம்
இதற்கு காரணம் ராஷ்மிகா மந்தனா மிஸ் மாலினி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி தான். அந்தப் பேட்டியில், ராஷ்மிகாவிடம் நீங்கள் தியேட்டரில் பார்த்த முதல் படம் என கேள்வி கேட்கப்பட்டது. இந்தக் கேள்வியால் மிகவும் ஆர்வமான ராஷ்மிகா, கில்லி படம். உங்களுக்கு நான் ஏன் தளபதி விஜய் சாரை அந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்ற காரணம் தெரியுமா? ஏனென்றால் நான் தியேட்டரில் பார்த்த முதல் படம் கில்லி. நான் பெரிய ஸ்கிரீனில் பார்த்த முதல் ஹீரோ விஜய் சார் தான்.
ரீமேக் என தெரிந்தது
சமீபத்தில் தான் நான் தெரிந்து கொண்டேன். கில்லி படம் ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் என்று. எனக்கு தெரிந்து அது போக்கிரி படத்தின் ரீமேக் என்று நினைக்கிறேன். ஆனால், படம் பார்க்கும் போது எனக்கு எதுவும் தெரியாது. நான் மிகவும் கொண்டாட்டத்துடன் படம் பார்த்தேன்.
கில்லி படத்தில் வரும் அப்படி போடு பாடலை மிகவும் ரசித்தேன். அந்தப் பாடல் ஓ மை காட்.. என் வாழ்நாளின் பெரும்பகுதியில் அந்தப் பாடலை மட்டுமே பாடிக் கொண்டிருந்தேன். என் அப்பா நிறைய ரஜினி சார் படங்களைப் பார்ப்பார். ஆனால், என்னைப் பொறுத்தவரை, விஜய் மற்றும் த்ரிஷா தான் திரையில் பார்த்த முதல் நடிகர்கள். அவர்களை இன்றும் காதலிக்கிறேன் என்றும் ராஷ்மிகா கூறினார்.
விளக்கமளித்த நெட்டிசன்ஸ்
இவரது இந்தப் பேட்டி வைரலாகவே பலரும் ராஷ்மிகாவை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். விஜய்யின் கில்லி திரைப்படம் 2004ம் ஆண்டு தான் வெளியானது. இந்தப் படம் 2003ம் ஆண்டு வெளியான மகேஷ் பாபுவின் ஒக்கடு படத்தின் ரீமேக். தமிழில் விஜய் தான் போக்கிரி படத்திலும் நடித்தார். இந்த போக்கிரி படம் 2006ம் ஆண்டு தெலுங்கில் போக்கிரி என வெளியான படத்தின் ரீமேக் தான். தமிழில் போக்கிரி படம் 2007ம் ஆண்டு வெளியானது என பலரும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
மன்னிப்பு கேட்ட ராஷ்மிகா
தான் அளித்த பேட்டியை குறிப்பிட்டு பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ராஷ்மிகா மன்னிப்பு கேட்டு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், , "அவுனு.. டெலுசு சாரி.. ஒக்கா பூபூ ஐபோயிண்டி.. இண்டர்வியூ அய்யய்யோர்வதா அன்னுகுன்னா ரேய்ய் போக்கிரி என்பது போக்கிரி அனி.. எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, மன்னிக்கவும். இது என் தவறு.. இருந்தாலும் விஜய்யின் எல்லா படமும் எனக்கு ரொம்ப பிடிக்கும், அதனால் பரவாயில்லை. கில்லி ஒக்கடுவின் ரீமேக் என்பதையும், போக்கிரி போக்கிரியின் ரீமேக் என்பதையும்,மக்கள் சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டுவார்கள் என்பதையும் நேர்காணலுக்குப் பிறகு உணர்ந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
விஜய்யுடன் ஜோடி போட்ட ராஷ்மிகா
2021ம் ஆண்டு வெளியான கார்த்தியின் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் மொழியில் நடிக்க என்ட்ரி கொடுத்த ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து 2023ம் ஆண்டு வம்ஷி பைடிபள்ளி இயக்கிய வாரிசு படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பூஜையின் போட்டோஸ் எல்லாம் வைரலானதும் குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்