கல்யாணம் யாரு கூட மேம்?… ‘அது எல்லாருக்கும் தெரியுமே’ - புஷ்பா 2 மேடையில் காதலை உறுதி செய்த ராஷ்மிகா
புஷ்பா 2 மேடையில் காதலை உறுதி செய்த ராஷ்மிகாமந்தனா! - என்ன சொன்னார் தெரியுமா?
சென்னையில் புஷ்பா 2 படக்குழுவினர் 'வைல்ட் ஃபயர்' என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ’கிஸ் கிஸ் கிஸ்கிஸ்ஸ்கிக்’ என்னும் பாடல் வெளியிடப்பட்டது.
சென்னையில் நடந்த இந்த பாடல் வெளியீட்டு விழாவில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகை ஸ்ரீலீலா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்வில் ராஷ்மிகா பேசும் போது, “ஹாய் நண்பா... நல்லா இருக்கீங்களா? பாடல்கள் எல்லாம் உங்களுக்கு பிடித்ததா? உண்மையாகச் சொல்கிறேன்.. என்னுடைய வாழ்க்கை புஷ்பாவிற்கு முன், புஷ்பாவிற்கு பின் என்றாகி விட்டது.
இப்போது எனக்கு மிஸ்ஸிங் ஃபீல் வந்து விட்டது. என்னுடைய வாழ்க்கை புஷ்பா திரைப்படத்திற்கு சமம் என்று சொல்வேன். அல்லு அர்ஜூன் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபர்.” என்று பேசினார். அதனை தொடர்ந்து தொகுப்பாளர்கள் சிலவற்றின் பெயர்களைச் சொல்லி, அதற்கான பதில்களை ராஷ்மிகாவிடம் வாங்கினர்.
மிஸ்ஸிங் ஃபீல் வந்து விட்டது.
கீதா கோவிந்தம் என்ற பெயரைச் சொன்ன போது.. அது ஸ்பெஷல் ஃபிலிம்.. என்றார். தொடர்ந்து புஷ்பா என்று சொன்ன போது, ஒன் அண்ட் ஒன்லி ஃபிலிம் என்றும்.. அல்லு அர்ஜூன் தி ஒன் அண்ட் ஒன்லி என்றும் கூறினார். தொடர்ந்து உங்கள் காதலன் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்ட போது, அவர் கொஞ்சம் கோபக்காரகாகவும் இருக்க வேண்டும், அன்பாளராக இருக்க வேண்டும் என்றார்.
அவர் பணக்காரராகவோ, பெரிய அளவில் அழகாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. மனது மட்டும் பிடித்து இருந்தால் போதும் என்றார். மேலும் பேசிய அவர், நான் கல்யாணம் செய்து கொள்ளும் நபர் குறித்து எல்லோருக்கும் தெரியும். புஷ்பா 2 திரைப்படம் வந்த உடன் அதற்கான பதில் உங்களுக்கு கிடைக்கும்” என்று பேசினார்.
நேஷனல் க்ரஷின் க்ரஷ்
முன்னதாக, நேஷனல் க்ரஷ் என செல்லமாக அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும், தென்னிந்திய நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் டேட்டிங் செய்வதை வெளிப்படுத்தாதபோது பல முறை கேமராவில் சிக்கியிருக்கின்றனர்.
குறிப்பாக இருவரும் தனித்தனியாக படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியே விடும்போது, இரண்டும் ஒரே இடம் தான் என அதைப் பார்த்த பலர் கமெண்ட் இட்டு வருகின்றனர்.
சமீபத்தில், விஜய் தேவரகொண்டா ஒரு நிகழ்ச்சியில் தான் சிங்கிளாக 35 வயது வரை எப்படி இருக்க முடியும் எனப்பதில் சொல்லி தான் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை சூசகமாக தெரிவித்தார்.
தமிழில் தான் பேசுவேன்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் மக்களிடம் தமிழிலேயே பேச ஆரம்பித்தார். இதையடுத்து அங்குள்ள பலரும் தெலுங்கில் பேசுமாறு வலியுறுத்தினர். இதைக் கேட்ட அல்லு அர்ஜூன், தான் தமிழில் தான் பேசுவேன் என உறுதியாக கூறினார். மேலும், எந்த ஊர் செல்கிறோமோ அந்த ஊர் மொழியில் பேசுவது தான் மரியாதை எனவும் கூறியுள்ளார்.
என் சென்னை மக்கள்
இதைத் தொடர்ந்து பேசிய அவர், நான் பிறந்த மண்ணுக்கு அன்போடு வணக்கம். என் சென்னை மக்களுக்கு வணக்கம். மறக்க முடியாத நாள் இது. எத்தனையோ வருஷம் இந்த நிகழ்ச்சிக்காகவும் இப்படி உங்களை சந்திப்பதற்காகவும் எதிர்பார்க்கிறேன்.
புஷ்பா படத்துக்காக பல இடங்களுக்குப் போனேன். ஆனால் சென்னைக்கு வரும்போது அதோட பீல் வேற. உங்க வாழ்க்கையில முதல் 20 வருடம் எப்படி இருக்கோ அப்படிதான் வாழ்க்கை முழுவதும் இருப்பீங்கனு சொல்வாங்க. அப்படி பாத்தா நான் எங்க போனாலும் சென்னை தி.நகர் காரன்தான். சின்ன வயசுல ரஜினி சார் படத்துக்கு அடிச்சு பிடிச்சு டிக்கெட் வாங்கிப் பார்ப்பேன்.
என் ஊர்ல என்னுடைய படத்துக்கு இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி வேணும்னு விரும்பினேன். இன்னைக்கு அது நடந்திருக்கு. நான் தமிழ்லதான் இன்னைக்கு பேசுவேன். இந்த மண்ணுக்கு நான் கொடுக்கிற மரியாதை அது.
3 வருஷ உழைப்பு
இந்த படத்துக்காக நான் 3 வருஷம் உழச்சிருக்கிறேன். நான் என்னோட வாழ்க்கையில சில வருஷமா ஒரே பெண்ண பார்த்துட்டு இருக்கேன். அந்த பெண் ராஷ்மிகா தான். என்னுடைய பெஸ்ட்டை கொடுக்க வச்சதுக்கு நன்றி ராஷ்மிகா. ஶ்ரீ லீலா ஒரு பாடலுக்கு வர்றேன்னு சொன்னதும் நான் கொஞ்சம் தயாராகிட்டேன். அந்த அளவுக்கு கடினமாக உழைக்கக்கூடியவங்க ஶ்ரீ லீலா.
வாழ்க்கை கொடுத்த சுகுமார்
நான் ஆரம்பத்துல ஒரு படம் மட்டும் பண்ணீட்டு ஒரு வருஷம் வீட்டுல இருந்தேன். அப்போ சுகுமார் எனக்கு ̀ஆர்யா' படம் கொடுத்தார். அதுக்கு அப்புறமா தான் எனக்கு தொடர்ந்து படங்கள் வந்து அத பண்ணீட்டு இருக்கேன். என்னுடைய வாழ்க்கையை மாற்றியமைச்ச நபர்களில் முக்கியமானவரா நான் அவரைதான் சொல்லுவேன்.
இப்போகூட படம் தரமாக வரணும்னு ரொம்ப வேலை பார்த்துட்டு இருக்கார். அதுனாலதான் அவரால இங்க வர முடியல" எனக் கூறினார்.
டாபிக்ஸ்