Ethirneechal: குணசேகரன் மிஸ்ஸிங்.. ஜனனிக்கு அப்பத்தா கொடுத்த பொறுப்பு.. ஸ்கெட்ச் போடும் கதிர் - எதிர்நீச்சல் புரமோ!
எதிர்நீச்சல் சீரியலின் புரமோ வெளியாகி இருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்தவர் மாரிமுத்து. அந்த கதாபாத்திரத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. ஒரு கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியலை அவருக்காக டிவி முன்னே அமர்ந்து பார்த்த ரசிகர்களும் உண்டு. இந்த நிலையில்தான் யாரும் எதிர்பார்க்காத வண்ணம், அண்மையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
அவரது இறப்பு திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் அந்தக் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் அந்தக் கதாபாத்திரத்தில் பிரபல நடிகரும், எழுத்தாளருமான வேலராம மூர்த்தி நடிக்க இருப்பதாக கூறி, அவருக்கான மாஸ் புரமோவும் வெளியிடப்பட்டது.
மாரிமுத்துவுக்கு ட்ரேடு மார்க் வார்த்தையாக ஏம்மா ஏய்.. அமைந்த நிலையில், இளந்தாரி பயலுக என்ற வார்த்தையை வேலராம மூர்த்தி பயன்படுத்தி வந்தார். ஆனால், மாரிமுத்துவை போல வேலராம மூர்த்தியால் தொடர்ச்சியாக சீரியலில் வரமுடியவில்லை. காரணம், முன்னதாக இந்த சீரியலிலில் கமிட் ஆகும் போதே தனக்கு சினிமா வாய்ப்புகள் இருப்பதாக கூறியிருந்தார்.