‘ராம்சரணை அவமதித்த ஷாரூக் கான்’ வெளிநடப்பு செய்த ஒப்பனை கலைஞர்.. அம்பானி திருமணத்தில் சர்சை!
ஷாருக்கான் ராம் சரணை 'இட்லி' என்று அழைத்ததை சமூக வலைதளமும் ரசிக்கவில்லை. ஷாருக்கான் மீது இனவெறியாளர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜாம்நகரில் நடந்த அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் மூன்று நாள் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களில் நாடு மற்றும் உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், ரிஹானா, சல்மான் கான், ஷாருக்கான், அமீர்கான், ராம் சரண், ராணி முகர்ஜி, மாதுரி தீட்சித், கரிஷ்மா கபூர், கரீனா கபூர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராம் சரணை மேடைக்கு அழைத்த ஷாருக்
இரண்டாம் நாளில், சல்மான், ஷாருக் மற்றும் அமீர் ஆகிய மூன்று கான்களும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மேடையில் ஒன்றாக நடனமாடியதை மக்கள் பார்த்தனர். மூவரும் முதலில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் ஆர்.ஆர்.ஆர் பாடலான நாட்டு நாட்டு பாடலின் ஹூக் ஸ்டெப் செய்ய முயற்சித்தனர். ஒரு கட்டத்தில், ராம் சரணும் அவர்களுடன் மேடையில் இணைந்து, அவர்கள் அனைவரும் ஒன்றாக பாடலின் ஹூக் ஸ்டெப்பை செய்தனர்.
ராம் சரணை 'இட்லி' என்று அழைத்த ஷாருக்.. ஒப்பனை கலைஞர் எதிர்வினை!
ராம் சரணை மேடைக்கு அழைத்த ஷாருக்கான், நடனமாட கேட்டுக் கொண்டார். ஷாருக்கான் நகைச்சுவையாக தெலுங்கு அல்லது தமிழில் பேசுவது போல் பல கிண்டலான வார்த்தைகளை கூறினார். அதில் ஒன்று தான், ராம்சரணை அவர் இட்லி என்று அழைத்தது. அதன் வீடியோவை பிங்க்வில்லா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து ராம் சரனின் ஒப்பனைக் கலைஞர் ஜெபா ஹசன், "நான் ஒரு பெரிய ஷாருக்கான் ரசிகன், ஆனால் அவர் ராம் சரணை மேடையில் அழைத்த விதம் எனக்கு மிகவும் பிடிக்கவில்லை" என்று கூறினார்.
‘ராம் மீது ஷாருக்கான் அவமரியாதை’ ஜெபா குற்றச்சாட்டு
ஃப்ரீ பிரஸ் ஜர்னலின் படி, ஷாரூக் மீது ஜெபா ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில், "'பெண்ட் இட்லி வடா ராம் சரண் கஹான் ஹை து (தின்பண்டங்களின் பெயர்களைச் சொல்வது, ராம் சரண் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்???) என்று கூறிப்பிட்ட அவர், இதையடுத்து நான் நிகழ்ச்சியில் இருந்து வெளிநடப்பு செய்தேன். ராம்சரண் போன்ற ஒரு நட்சத்திரம் அங்கு அவமதிக்கப்பட்டார் என்று அவர் எழுதியுள்ளார்.
ஷாருக்கின் கருத்துக்கு இணையம் எதிர்வினை
ஷாருக்கான் ராமை 'இட்லி' என்று அழைத்ததில் இணையமும் மகிழ்ச்சியடையவில்லை. ராம் சரணை 'இட்லி' என்று குறிப்பிடுவதன் மூலம் ஷாருக்கான் உணர்ச்சியற்றவராக இருக்கிறார், இது தென்னிந்தியர்களுக்கு எதிரான இனவெறி ஸ்டீரியோடைப் என்று கருதப்படலாம் என்று ஒருவர் ட்வீட் செய்துள்ளார். மற்றொரு கமெண்ட், "தென்னிந்தியரான ராம் சரணை இட்லி என்று அழைப்பதன் மூலம் ஷாருக்கான் சாதாரணமாக இனவெறி காட்டுகிறார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், "தென்னிந்திய இயக்குனர் ஒருவர் தனது கேரியரில் மிகப்பெரிய ஹிட் கொடுத்ததை அடுத்து ஷாருக்கானை 'ராம் சரண் இட்லி' என்று அழைப்பதன் மூலம் தென்னிந்தியர்கள் மீது ஷாருக்கான் இனவெறி காட்டுகிறார்" என்று பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அவர் மற்றொரு அறிக்கையைப் பகிர்ந்துள்ளார், ஆனால் பின்னர் அதை நீக்கினார். அதில், “நாங்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால் எல்லோரும் எங்களுக்கு 'குறைவாக' கொடுக்க விரும்புவது வேடிக்கையாக இருக்கிறது, அதே நேரத்தில் ஒரு கலைஞர் டெல்லி அல்லது மும்பையைச் சேர்ந்தவராக இருந்தால் அதே விஷயத்திற்கு மூன்று மடங்கு தொகையை ஒரு கலைஞருக்கு செலுத்துவதில் அவர்கள் பரவாயில்லை.” என்று அவர் அதில் பதிவிட்டிருந்தார்.