தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalaivar 171 As Coolie: ‘’எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே''.. வின்டேஜ் லுக்கில் 'கூலி' ரஜினி; வெளியான டைட்டில் டீஸர்

Thalaivar 171 as COOLIE: ‘’எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே''.. வின்டேஜ் லுக்கில் 'கூலி' ரஜினி; வெளியான டைட்டில் டீஸர்

Marimuthu M HT Tamil
Apr 22, 2024 06:47 PM IST

Thalaivar 171 as COOLIE: ரஜினிகாந்தின் 171ஆவது படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

தலைவர் 171
தலைவர் 171

ட்ரெண்டிங் செய்திகள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைத்து, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கயிருக்கிறார். இப்படம் ரஜினிகாந்தின் திரை வரிசையில் 171ஆவது படமாக வருகிறது. இப்படத்தில் சண்டைக் காட்சிகளை அன்பறிவ் செய்ய இருப்பதால், படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிரடியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் படக்குழு, ரஜினிகாந்தின் 171ஆவது படம் குறித்த போஸ்டரை மார்ச் 28ஆம் தேதி வெளியிட்டது. அதில் ரஜினிகாந்தின் 171ஆவது படத்தின் டைட்டிலை, ஏப்ரல் 22ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்து இருந்தது. அப்போது வெளியிடப்பட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கோல்டு கைக்கடிகாரங்களை, விலங்குபோல் மாட்டி, கூலிங் கிளாஸ் அணிந்து சிரித்த முகத்துடன் இருக்கிறார். அந்த ஸ்டில் ரசிகர்கள் பலரை ஈர்த்தது.

மேலும் படத்தில் கடிகாரத்துக்கு முக்கியப் பங்கு இருப்பதை சொல்லாமல் சொன்னது. இந்நிலையில் அந்த அறிவிப்பினை உறுதி செய்யும் வகையில், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம், ’கவுன்டவுன் தொடங்கியது; இன்னும் இரண்டு நாட்களில் தலைவர் 171ஆவது படத்தின் டைட்டில் ரிவியல் டீஸர் வெளியாகிறது’ என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் ரஜினிகாந்த் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம், ஜெயிலர். இப்படம் ரூ.650 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. அதேபோல், லோகேஷ் கனகராஜ் கடைசியாக இயக்கிய லியோ திரைப்படம் ரூ.612 கோடி வசூலும், நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்கிய ‘விக்ரம்’படம் ரூ.500 கோடி வசூலையும் எட்டியது.

இந்நிலையில் லியோ படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், நடிகர் விஜய்க்கு போன் செய்து, நடிகர் கமல்ஹாசன் பேசுவதுபோல் காட்சிகள் இடம்பெற்று, லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் அப்படம் வந்தது. இந்நிலையில், தலைவர் 171 படமும் ரஜினிகாந்தின் படமாக வருமா, அல்லது லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வருமா எனவும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ராகவா லாரன்ஸும், சிவகார்த்திகேயனும் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படம் தொடர்பாக லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் அளித்தபேட்டி ஒன்றில், ‘’ரஜினிகாந்திடம் படம் தொடர்பாக தொடர்ந்து போன் மூலம் பேசி வருகின்றேன். இந்தப் படத்தில் பணியாற்ற மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன். தலைவர் 171 படத்துக்குண்டான திரைக்கதை எழுதுவதில் பிஸியாக இருப்பதால், என்னை தொடர்புகொண்டவர்களிடம் தொடர்பில் இருக்க முடியவில்லை’’என்றார்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் 171ஆவது படத்தின் தலைப்பு, ‘’கூலி'' என வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், ரஜினிகாந்த் தனது ரங்கா படத்தில் பேசிய பழைய வசனத்தை கூலி திரைப்படத்தில் பேசியுள்ளார். ‘’அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள், தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு;

அடப்பாவி என்பார்கள், தப்பாக நினைக்காதே;

எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே;

சோறு உண்டு;

சுகம் உண்டு;

மது உண்டு;

மாது உண்டு;

மனம் உண்டு என்றாலே சொர்க்கத்தில் இடம் உண்டு போடா’ என்னும் பட வசனத்தை மாஸாகப் பேசியுள்ளார். இந்த வசனம் கண்ணதாசனால் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

’’விக்ரம்’’ பட டைட்டில் டீஸரில் ஆரம்பிக்கலாங்களா என வசனத்தினை வைத்த லோகேஷ் கனகராஜ், லியோ பட டைட்டில் டீஸரில் ’’ப்ளடி ஸ்வீட்’’ என்றார். இந்நிலையில் கூலி திரைப்படத்தில், முடிச்சுடலாமா என ரஜினியை வசனம் பேசவைத்துள்ளார்.

முன்னதாக, ரஜினிகாந்த் நடிக்கும் 170ஆவது படமான வேட்டையன் படம் முடியும் தருவாயில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை டி.ஜே.ஞானவேல் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்