Meena: நோ சொன்ன ரஜினிகாந்த்.. கடும் வாக்குவதம் செய்த மீனா.. எந்த படத்திற்காக தெரியுமா?-meena argued with super star rajinikanth - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Meena: நோ சொன்ன ரஜினிகாந்த்.. கடும் வாக்குவதம் செய்த மீனா.. எந்த படத்திற்காக தெரியுமா?

Meena: நோ சொன்ன ரஜினிகாந்த்.. கடும் வாக்குவதம் செய்த மீனா.. எந்த படத்திற்காக தெரியுமா?

Aarthi Balaji HT Tamil
Apr 18, 2024 06:22 AM IST

படையப்பா படத்தில் நடிப்பது தொடர்பாக ரஜினிக்கும், மீனாவுக்கும் இடையே பெரும் வாக்குவதம் நடந்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

நடிகை மீனா
நடிகை மீனா

மீனா முதன் முதலில் எங்கேயோ கேட்ட குரல், அன்புள்ள ரஜினிகாந்த் போன்ற படங்களில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ஆனால் அதன் பிறகு ரஜினிகாந்துடன் ஹீரோயினாக நடித்த படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

ரஜினிகாந்த் நடிப்பில் இன்றும் ரசிகர்கள் மனதில் நிற்கும் படம் படையப்பா. படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணனின் கதாபாத்திரம் பெரிதும் பாராட்டப்பட்டது. ரம்யா கிருஷ்ணன் இளம் வயதிலேயே வலிமையான வில்லன் வேடத்தில் நடித்தார். படையப்பாவில், நீலாம்பரி இன்னும் பேசப்படும் கதாபாத்திரம் மற்றும் ரம்யா கிருஷ்ணனுக்கு பிரேக் கொடுத்த கதாபாத்திரமும் அது தான்.

ரஜினிக்கும், மீனாவுக்கும் இடையே பெரும் வாக்குவதம்

தற்போது படையப்பா படத்தில் நடிப்பது தொடர்பாக ரஜினிக்கும், மீனாவுக்கும் இடையே பெரும் வாக்குவதம் நடந்ததாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். படையப்பா படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கலாம் என்று கே.எஸ்.ரவிக்குமாரிடம், மீனா கூறினார். ஆனால் ரஜினிகாந்த் இதற்கு சம்மதிக்கவில்லை. அதை ரம்யா கிருஷ்ணன் செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் வலியுறுத்தி வந்தார்.

மீனா நடிப்பில் பிரச்னை இல்லை

மீனா நடிப்பதில் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று கே.எஸ்.ரவிக்குமார் கூறினார், ஆனால் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணனை வில்லியாக நடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அதனால் அந்த கதாபாத்திரத்தில் ஏன் நடிக்க முடியாது என்று மீனா கேட்டு உள்ளார். 

அதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், மீனாவின் குழந்தை முகமும், சிறிய குரலும் வில்லியாக நடித்தால் நன்றாக இருக்காது என கூறி இருக்கிறார்.

திரையுலக வாழ்க்கையே பாழாகிவிடும்

மேலும், வில்லியாக நடித்தால் மீனாவின் தற்போதைய திரையுலக வாழ்க்கையே பாழாகிவிடும் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஆனால் இந்த விஷயத்தில் மீனா இன்னும் கோபமாக இருப்பதாக ரிஜினிகாந்த் ஒருமுறை பொது மேடையில் கூறியிருந்தார்.

அப்போது அந்த வேடத்தில் நடிக்க அம்மா சம்மதிக்கவில்லை என்று மீனாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த வகையில் அம்மா மீது வெறுப்பு இருப்பதாகவும் சொன்னார். மீனா ஹீரோயினாக ஜொலித்து கொண்டிருந்த நேரத்தில் தான் மீனாவுக்கு வில்லி வாய்ப்பு கிடைத்தது.

மீனா, ரஜினிகாந்த் ஜோடியாக நடித்த படங்கள் அனைத்தும் ஹிட். எஜமான் படத்தில் முதன் முறையாக ரஜினியின் கதாநாயகியாக மீனா நடித்தார். பின்னர் ரஜினியுடன் வீரா, முத்து போன்ற பல படங்களில் நடித்தார்.

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சௌந்தர்யா , ரம்யா கிருஷ்ணன் , நாசர், சிவாஜி கணேசன், லட்சுமி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் படையப்பா. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி என்ற நெகட்டிவ் கேரக்டரில் மிரட்டி இருந்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.