ராமாபுரம் தோட்டத்தில் இதுதான் நடக்கும்.. அப்போ சிகரெட் குடிச்சிட்டு இருப்பேன் - ரஜினி ஓபன் டாக்
ராமாபுரம் தோட்டத்தில் இதுதான் நடக்கும்.. அப்போ சிகரெட் குடிச்சிட்டு இருப்பேன் என ரஜினி ஓபன் டாக்காக சில விஷயங்களை வி.என். ஜானகியம்மாளின் நூற்றாண்டு விழாவில் பேசியிருக்கிறார்.
ஜானகியம்மா போட்ட கல்யாணச் சாப்பாடு பற்றியும், நான் சிகரெட் குடிக்கிறதைப் பத்தி அவங்களுக்கு இருந்த எண்ணம் பற்றியும் ரஜினி ஓபன் டாக்காகப் பேசியுள்ளார்.
சென்னையை அடுத்த வானகரத்தில் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் ஜானகியம்மாள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
அதில், ‘’தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த வீட்டுக்கு கடம்பூர் ராஜூ அவர்கள் அழைப்பிதழ் வந்து என் வீட்டில் வந்து கொடுத்திருந்தாங்க. நான் வந்து வீடியோ மூலமாக உங்களிடம் பேசிக்கொண்டு இருக்கிறேன். ஜானகி அம்மாளும் எம்.ஜி.ஆர். அவர்களும் சேர்ந்து நடித்த முதல் படம், மருதநாட்டு இளவரசி என நினைக்கிறேன்.
அப்போது அவங்க மிகப்பெரிய நட்சத்திரம். எம்.ஜி.ஆர் சாருக்கு இரண்டாவது படமோ, மூன்றாவது படமோ, அப்பதான் ஹீரோவாக நடிச்சிட்டு வர்றாரு. அப்பவே வந்து எம்.ஜி.ஆர் சாரை பத்தி, இவர் மிகப்பெரிய நடிகர் ஆவார் அப்படினு கணிச்சு, உச்சத்தில் இருந்த தனது திரைவாழ்வை தியாகம் பண்ணி, அவரைக் காதலிச்சி மணந்தார்.
ராமாபுரம் தோட்டத்தில் நடந்தது இதுதான்: ரஜினி
கடைசி வரைக்கும் எம்.ஜி.ஆரை சந்தோஷமாக பாதுகாப்பாகப் பார்த்துக்கிட்டாங்க. நிறையபேருக்கு தெரியும் எம்.ஜி.ஆர் சாருடைய ராமாவரம் தோட்டத்தில் எப்போது போனாலும் சாப்பாடு கிடைக்கும்ன்னு. இருநூறு, முந்நூறு பேர் சர்வசாதாரணமாக சாப்பிடுவாங்க. சாம்பார் சாதம், தயிர் சாதம், அந்த மாதிரி கிடையாது. நல்ல ஒரு கல்யாணச் சாப்பாடு மாதிரி. வெஜிடேரியன், நான் வெஜிடரியேன் என எப்போதுமே கிடைக்கும். அது வி.என்.ஜானகியம்மா மேற்பார்வையில் தான் நடக்கும்.
காய்கறி வாங்குவதில் இருந்து, சமைக்குறதில் இருந்து எல்லாமே. அதை எம்.ஜி.ஆர் சாரே வந்து சொல்லியிருப்பார். அப்படி பக்கபலமாக இருந்தவர்.
அதிமுக தலைமைச் செயலகமாக இருப்பது, வி.என்.ஜானகியம்மா உழைத்து சம்பாதிச்சு வைச்சிருந்த வீடு. அதை கட்சிக்காக எம்.ஜி.ஆர் சார் கேட்கும்போது எழுதிக்கொடுத்திட்டாங்க. எப்போதுமே பொதுவேலைகளில் அவங்க ஜாஸ்தி வந்ததே கிடையாது. தோட்டம்,வீடு, சமையல்ன்னு அவங்க வேலையைப் பார்த்திட்டு இருந்தாங்க. ஈழத்தமிழர் பிரச்னைகளுக்குப் போராடும்போது பார்த்திருக்கேன்.
நான் வந்து அவரை மூன்று முறை சந்திச்சு இருக்கேன்.நான் நடித்து கவிதாலயா தயாரித்த ராகவேந்திரா படத்தை எம்.ஜி.ஆர் சாரை அழைத்துக் காட்டச் சொன்னார், கே.பி.சார். நானும் அவரை போனில் அழைத்து சொன்னேன். அப்போது முதன்முறையாக எம்.ஜி.ஆர் சார் கூட படம் பார்க்க வி.என்.ஜானகியம்மா உடன் வந்திருந்தாங்க. அதுதான் அவர்களை முதன்முதலில் பார்த்தது. அப்போது பாராட்டுனாங்க.
இரண்டாவது அவங்க முதலமைச்சராகப் பதவியேற்றபின், வி.என். ஜானகியம்மாவுக்காக ஆர்.எம்.வீ ஒரு கூட்டம் நடத்துறாங்க. அதில் நான் மேடையில் பேசுகிறேன். அப்போது இரண்டாவது தடவை வி.என்.ஜானகியம்மாவைப் பார்த்திருக்கேன்.
அவருடைய தத்துப்பிள்ளை அப்புவுக்கு இரண்டு வீடுகள் இருந்தது. அதில் ஒரு வீட்டில் எனது படத்தின் சூட்டிங் நடந்துகொண்டிருந்தது. அப்போது அவங்க அரசியலில் இருந்துவிலகி இருந்தாங்க. என்னைப் பார்க்க ஆசைப்பட்டாங்க. உடனே, நான் போய்ப் பார்த்தேன்.
ராகவேந்திரா பார்த்திட்டு எம்.ஜி.ஆர் சொன்னது: ரஜினி
அவங்க கையாலேயே காபி போட்டுக் கொடுத்தாங்க. ராகவேந்திரா படம் பார்த்திட்டு ரொம்ப நாட்கள் கழித்து, ரஜினி இவ்வளவு சாந்தமாக செய்திருக்கார்ன்னு எம்.ஜி.ஆர் பாராட்டுனதைச் சொன்னாங்க. அதேமாதிரி ரஜினி சிகரெட் குடிப்பதைப் பலர் பின்பற்றுவார்கள். அவர் இப்படி பண்ணக்கூடாதுன்னு எம்.ஜி.ஆர் சார் சொல்ல ஆசைப்பட்டதை அப்போது சொன்னாங்க.
எம்.ஜி.ஆர் சார் மறைவுக்குப் பின் ஜானகியம்மா அரசியலுக்கு வந்தது ஒரு அரசியல் விபத்து. சூழ்நிலைக் கைதியாக இருந்து பலபேரின் வற்புறுத்தலில் சி.எம். ஆனாங்க. தேர்தல் அரசியல் என வரும்போது, இரண்டு அணியாக பிரிந்து, இரட்டை இலைமுடக்கப்பட்டு, படுதோல்வியைச் சந்திச்சாங்க. அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை.
நான் 2017ல் அரசியலுக்கு வர்றதாக சொன்னேன். அப்போது நிறையபேர் ஆலோசனை கொடுக்க வந்தாங்க. அது எல்லாத்தையும் கேட்டால், அவ்வளவு தான், எல்லாத்தையும் இழந்திடவேண்டியது தான்.
ஒரு முடிவு எடுக்கும்போது நமக்கும் சந்தோஷம் திருப்தியா இருக்கணும். மத்தவங்களுக்கும் சந்தோஷம் திருப்தியான்னு யோசனை பண்ணி பாருன்னு சொல்லுவாங்க. அப்படி, மத்தவங்களுக்கும் சந்தோஷம் திருப்தி தரும் முடிவை எடுக்கச்சொல்லி, சொல்வாங்க. அப்படி ஜானகி அம்மாள், நன்கு யோசிச்சு, இரட்டை இலை கிடைப்பதற்காக மிகப்பெரிய தியாகம் செய்தார். ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்தார்.
அடுத்து அரசியலில் இருந்து விலகிட்டாங்க. அது எவ்வளவு பெரிய குணம். அவங்களுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கு மனப்பூர்வமான பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்’ என நடிகர் ரஜினி கூறியிருக்கிறார்.
டாபிக்ஸ்