தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Radikaa Sarathkumar : ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்தலயா? சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை வெளுத்து வாங்கிய ராதிகா

Radikaa Sarathkumar : ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்தலயா? சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை வெளுத்து வாங்கிய ராதிகா

Pandeeswari Gurusamy HT Tamil
May 14, 2024 12:52 PM IST

Radikaa Sarathkumar : “ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங் களே...அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும். shame on dmk”- ராதிகா

ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்தலயா? சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை வெளுத்து வாங்கிய ராதிகா
ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்தலயா? சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை வெளுத்து வாங்கிய ராதிகா

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னை எருக்கஞ்சேரியில் கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழா நடைபெற்றது. திமுக தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது பேச்சில் தமிழ்நாடு ஆளுநர் ரவி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ ஆகியோரை இழிவாக பேசினார்.

இந்நிலையில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தியின் இந்த பேச்சு சமூகவலைத்தளங்கில் வைரல் ஆன நிலையில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஸ்டாலின் அவர்களே உங்கள் கட்சியில் அத்தனை பேரிடமும் நான் சொல்கிறேன்.

குஷ்பூ கண்ணீர் பேட்டி

குஷ்பூவை சீண்டி பார்க்காதீர்கள். ஸ்டாலின் கண்ணை பார்த்து பேசக்கூடிய தைரியம் எனக்கு உள்ளது. குஷ்பூ பதில் கொடுத்தால் உங்களால் தாங்க முடியாது. கைத்தட்டலுக்காக பெண்களை அசிங்கமாக பேசுகிறீர்கள். யார் பெண்களை பற்றி அவதூறாக பேசினாலும் அது தங்கள் தாய் தந்தையை அவதூறாக பேசுவதற்கு சமம்.

பெண்களை இழிவாக பேசக்கூடிய நிலை எல்லா கட்சியிலும் உள்ளது. எல்லா ஆம்பளங்க கிட்ட நான் கேட்கும் கேள்வி ஒன்றுதான். பெண்ணை அவதூறாக பேச உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது என்றும் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியதுடன் செய்தியாளர் சந்திப்பில் கண்ணீர் சிந்தினார்.

இந்நிலையில் சிவாஜி கிருஷ்ண மூர்த்திக்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிவாஜி கிருஷ்ண மூர்த்தி கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையானார்.

சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழகப் பணியாற்றிட அனுமதி அளிக்குமாறு, கட்சியில் கோரிக்கை விடுத்தார். அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, மீண்டும் கழக உறுப்பினராகச் செயல்பட அனுமதிக்கப்பட்டார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

இந்நிலையல் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் வருகையை, I Am Back என பதிவிட்டு திமுகவினர் சமூகவலைத்தளங்களில் ட்வீட் செய்து வந்தனர்.

திமுகவில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டு பின்னர் மீண்டும் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சமீபத்தில் சரத்குமாரை விமர்சனம் செய்து பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைந்த சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சரத்குமார் இரவு 2 மணிக்கு மனைவியை எழுப்பி பாஜகவில் இணைய போவதாக கூறியதாக தெரிவித்திருந்தார். அந்த விஷயத்தை கொச்சையாக விமர்சனம் செய்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடுமையான வார்த்தைகளை பேசி இருந்தார்.

ராதிகா கொந்தளிப்பு

இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடுமையான விமர்சனம் செய்து ராதிகா சரத்குமார் தனது x பதிவில் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில் ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங் களே...அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்., shame on dmk என்று தெரிவித்துள்ளார் மேலும் அந்த பதிவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை டேக் செய்துள்ளார். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்