அம்மா ஆக போகிறார் கபாலி பட நடிகை..ரெட் கார்பெட் நிகழ்வில் பேறுகால வயிறுடன் சர்ப்ரைஸ் விசிட்
கபாலி பட நடிகையான ராதிகா ஆப்தே விரைவில் அம்மா ஆக போகிறார். சிஸ்டைர் மிட்நைட் என்ற படத்தின் ரெட் கார்பெட் நிகழ்வில் பேறுகால வயிறுடன் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார்.

அம்மா ஆக போகிறார் கபாலி பட நடிகை..ரெட் கார்பெட் நிகழ்வில் பேறுகால வயிறுடன் சர்ப்ரைஸ் விசிட்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து கபாலி படத்தில் நடித்து தனது அற்புத நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை ராதிகா ஆப்தே மற்றும் அவரது கணவர் பெனடிக்ட் டெய்லர் ஆகியோர் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்க்கின்றனர். சிஸ்டர் என்ற படத்தி|ன் ரெட் கார்பெட் நிகழ்வின் போது ராதிகா ஆப்தே கர்ப்பி|ணியாக இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த படத்தின் ஸ்கிரீனிங் பிஎஃப்ஐ லண்டன் திரைப்பட விழாவில் அக்டோபர் 16ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நிறைமாத கர்ப்பிணியாக ராதிகா ஆப்தே வந்திருந்தது பலருக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விஷயமாக இருந்தது.
ராதிகா ஆப்தே மறைமுக அறிவிப்பு