Top 10 Cinema News: முன்னாள் கணவரிடம் பாடகி சுசித்ரா மன்னிப்பு..!ராயன் வசூலில் தனித்துவ சாதனை - டாப் 10 சினிமா செய்திகள்-raayan box office singer suchitra apology and more tamil cinema top 10 kollywood news today august 14 2024 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top 10 Cinema News: முன்னாள் கணவரிடம் பாடகி சுசித்ரா மன்னிப்பு..!ராயன் வசூலில் தனித்துவ சாதனை - டாப் 10 சினிமா செய்திகள்

Top 10 Cinema News: முன்னாள் கணவரிடம் பாடகி சுசித்ரா மன்னிப்பு..!ராயன் வசூலில் தனித்துவ சாதனை - டாப் 10 சினிமா செய்திகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 14, 2024 09:05 PM IST

Top 10 Cinema News: முன்னாள் கணவரிடம் மன்னிப்பு கோரிய பாடகி சுசித்ரா, பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தனுஷின் ராயன் தனித்துவ சாதனை, தங்கலான் ரிலீஸ் விவகாரம் என இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்

Top 10 Cinema News: முன்னாள் கணவரிடம் பாடகி சுசித்ரா மன்னிப்பு, ராயன் வசூலில் தனித்துவ சாதனை
Top 10 Cinema News: முன்னாள் கணவரிடம் பாடகி சுசித்ரா மன்னிப்பு, ராயன் வசூலில் தனித்துவ சாதனை

முன்னாள் கணவரிடம் மன்னிப்பு கோரிய பாடகி சுசித்ரா

முன்னாள் கணவர் கார்த்திக்கை ஓரின சேர்க்கையாளர் என கூறிய விவகாரத்தில் பாடகி சுசித்ரா தனது யூடியூப் பக்கத்தில் மன்னிப்பு கோரி விடியோ பகிர்ந்துள்ளார்

தனுஷின் ராயன் வசூலில் தனித்துவ சாதனை

தனுஷ் நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் ராயன் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகியிருக்கும் நிலையில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 150 கோடி வசூலித்துள்ளது. சென்சாரில் ஏ சர்டிபிக்கேட் பெற்று ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்த முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. ராயன் தனுஷின் 50வது படமாக இருப்பதுடன், இந்த படத்தை அவரே இயக்கியுள்ளார்

அமரன் மேக்கிங் விடியோ

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படமான அமரன் படத்தின் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

மகாராணியாக மாறும் நயன்தாரா

குரங்கு பொம்மை, விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா படங்களை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கும் புதிய படத்துக்கு மகாராணி என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 8ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளார்கள்.

இதில், சினிமா பணிகளை நிறுத்துவது குறித்த தயாரிப்பாளர் சங்க முடிவு, நடிகர் சங்கக் கட்டிட விவகாரம், நட்சத்திர கலைவிழா நடத்தி நிதிதிரட்டுதல் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது

வயநாடு நிலச்சரிவுக்கு நிதியுதவி வழங்கிய பிருத்விராஜ்

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார்

சீனுராமசாமியின் கோழிப்பண்ணை சின்னத்துரை

யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கோழிப்பண்ணை சின்னத்துரை. தேனி, பெரியகுளம் போன்ற பகுதிகளில் படமாக்கப்பட்ட இந்த படத்தின் ட்ரெயலர் வெளியிடப்பட்டுள்ளது. படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது

தங்கலான் ரிலீஸுக்கு தடையில்லை

கடன் சிக்கல் விவகாரத்தில் சிக்கியிருந்த நிலையில், தங்கலான் பட தயாரிப்பாளர் நீதிமன்றம் சொன்ன தொகையை அவசரமாக செலுத்தினார். இதையடுத்து தங்கலான் ரிலீஸுக்கு தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே திட்டமிட்டபடி படம் நாளை வெளியாக இருக்கிறது

காயத்துடன் தேவாரா படப்பிடிப்பை முடித்த ஜூனியர் என்டிஆர்

கை மணிக்கட்டு பகுதியில் காயம் ஏற்பட்டு கையை அசைக்க முடியாத நிலையிலும், தேவாரா படத்தில் தனது பகுதியை நடித்து முடித்துள்ளார் தெலுங்கு ஹீரோ ஜூனியர் என்டிஆர். இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகையான ஜான்வி கபூர் முதல் முறையாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்

ஹீரோவாக அறிமுகமாகும் பாலகிருஷ்ணா மகன்

தெலுங்கு சினிமாவின் டாப் ஹீரோவாக இருந்து வரும் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மகன் மோக்சக்னா தேஜா ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹனுமான் படத்தை இயக்கிய பிரசாந்த் வர்மா இயக்குகிறார்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.