Pudupettai Villian: பவர் ஸ்டாருடன் ஐக்கியமான புதுப்பேட்டை பட மூர்த்தி!
புதுப்பேட்டை படத்தில் ரவுடிசம் செய்யும் மிரட்டலான அரசியல்வாதியாக தோன்றியிருப்பார் நடிகர் பாலிரெட்டி ப்ருத்வி ராஜ். தற்போது தமிழ் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் சிரிக்க வைத்து வருகிறார்.
டோலிவுட் சினிமாவில் நடிகர், அரசியல்வாதியாக இருப்பவர் பாலிரெட்டி ப்ருத்வி ராஜ். இவர் தமிழில் புதுப்பேட்டை படத்தில் ரவுடிசம் செய்யும் மிரட்டலான அரசியல்வாதியாக தோன்றியிருப்பார். படத்தில் மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் ஆக்ரோஷத்தையும், க்ளைமாக்ஸில் அனுதாபத்தையும் பெறும் கேரக்டரில் அட்டகாசமாக நடித்திருப்பார்.
ஆந்திர அரசியலில் முக்கிய புள்ளியாகவும் இருந்து வரும் ப்ருத்வி ராஜ், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் மாநில செயலாளராக இருந்து வருகிறார். இதையடுத்து இவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தெலுங்கு சினிமாவில் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இணைந்துள்ளார்.
ஆந்திர மாநிலம் மங்கலகிரியில் இருக்கும் ஜனசேனா கட்சியின் தலைமை அலுவலகத்தில், கட்சி தலைவர் பவன் கல்யாண் முன்னிலையில் தன்னை இணைத்து கொண்டார். வர இருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் ஜன சேனா கட்சியின் வெற்றிக்காக பாடுபடுவேன் என கட்சியில் சேர்ந்த பின் ப்ருத்வி ராஜ் கூறினார்.
இவர் தெலுங்கு சினிமாவில் 1980களில் இருந்து நடித்து வருகிறார். போலீஸ், காமெடியன், வில்லன், குணச்சித்திரம் என பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் இவருக்கு புதுப்பேட்டை தான் முதல் படம்.
இதைத்தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ் படத்தில், சந்தானத்தின் அப்பாவாக காமெடியில் கலக்கியிருப்பார். அதேபோல் பீஸ்ட், கன்னித்தீவு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது காமெடி கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்து வருகிறார். இதுவரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
2019ஆம் ஆண்டில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த் ப்ருத்வி ராஜ், திருப்பதி தேவஸ்தானத்தின் தொலைக்காட்சியான எஸ்விபசி டிவியின் தலைவாராக பொறுப்பு வகிர்த்தார்.
அந்த சேனலில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாக, இவர் பேசிய போன் பேசிய ப்ருத்வி ராஜ் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்த ப்ருத்வி ராஜ் சேனலில் இருந்த பொறுப்பில் இருந்து விலகினார்.
தற்போது நடிப்பு, அரசியல் என இருந்து வரும் இவர் ஜன சேனா கட்சியில் இணைந்துள்ளார். வரும் ஏப்ரல், மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற இருக்கிறது.
இவருடன் பிரபல டான்ஸ் மாஸ்டர் ஜானி மாஸ்டரும் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இணைந்துள்ளார். இவர் தான் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெறும் அரபி குத்து, ஜாலியோ ஜிம்கானா, வாரிசு படத்தில் ரஞ்சிதமே, ஜெயிலர் படத்தில் காவாலா உள்பட பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கும் ஜானி, திடீரென அரசியல் பிரவேசம் செய்துள்ளார்.
ஜனசேனா கட்சி ஆந்திரா, தெலங்கானா என தெலுங்கு பேசும் இரண்டு மாநிலங்களிலும் முக்கிய அரசியல் கட்சியாக இருந்து வருகிறது. தற்போது தெலுங்கு தேசம் கட்சியுடன், ஜன சேனா கட்சி கூட்டணி அமைத்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9