Kalki 2898 AD: ரசிகர்களின் காத்திருப்புக்கு முடிவு..! கல்கி 2898 ஏடி ஓடிடி ரிலீஸ் முழு விவரம் இதோ-prabhas starrer kalki 2898 ad movie ott relase date is out deets inside - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kalki 2898 Ad: ரசிகர்களின் காத்திருப்புக்கு முடிவு..! கல்கி 2898 ஏடி ஓடிடி ரிலீஸ் முழு விவரம் இதோ

Kalki 2898 AD: ரசிகர்களின் காத்திருப்புக்கு முடிவு..! கல்கி 2898 ஏடி ஓடிடி ரிலீஸ் முழு விவரம் இதோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 13, 2024 10:40 PM IST

ரசிகர்களின் காத்திருப்புக்கு முடிவு கிடைத்த விதமாக சயின்ஸ் பிக்சன் திரைப்படம் கல்கி 2898 ஏடி படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. எப்போது, எந்த ஓடிடியில் ரிலீஸ் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்

கல்கி 2898 ஏடி ஓடிடி ரிலீஸ் முழு விவரம் இதோ
கல்கி 2898 ஏடி ஓடிடி ரிலீஸ் முழு விவரம் இதோ

கடந்த ஜூன் மாதம் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் பாக்ஸ் ஆபிஸில் வசூலையும் அள்ளியது. இதையடுத்து ஒரு மாதம் கழித்து தற்போது படம் ஓடிடியில் வெளியாகி இருக்கிறது.

கல்கி 2898 ஏடி ஓடிடி ரிலீஸ்

அதன்படி, இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ஆக்ஸ்ட் 23 முதல் ஸ்டிரீமிங் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தெலுங்கு தவிர தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்பட பிற மொழிகளிலும் படம் வெளியிடப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

3டி அறிவியல் புனைகதை

கல்கி 2898 ஏடி திரைப்படம், மகாபாரதத்திலிருந்து குருக்‌ஷேத்திரப் போருக்கு ஆறாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கும் ஒரு கற்பனை உலகில் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உள்ளது.

2898ஆம் ஆண்டு தன்னைக் கடவுளாகக் கூறிக்கொள்ளும் யாஸ்கின் தலைமையிலான சர்வாதிகார ஆட்சியின் கீழ் பூமியின் கடைசி நகரத்தில் வாழ்ந்து வரும் காசி பற்றிய கதையை இது விவரிக்கிறது.

சாதாரண ஆண்களும் பெண்களும் உயிர்வாழ்வதற்காக அதிக முரண்பாடுகளுக்கு எதிராக போராடும் இந்த மோசமான இருப்பில், கலியுகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி வரும்போது சுரங்கப்பாதையின் முடிவில் வெளிச்சம் வருகிறது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி, இந்த படம் வெளியாகியுள்ளது.

இந்துகளின் புராணம் மற்றும் நவீன அறிவியல் புனைகதைகளின் கலவையை கொண்டதாக இந்த படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. படத்தில் திஷா பதானி, ராஜேந்திர பிரசாத், ஷோபனா, சாஸ்வதா சாட்டர்ஜி, பிரம்மானந்தம், பசுபதி, ஆனா பென் உள்பட பலரும் நடித்துள்ளார்கள்.

அதேபோல் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், மாளவிகா நாயர், இயக்குநர்கள் எஸ்.எஸ். ராஜமெளலி, ராம்கோபால் வர்மா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் உள்பட பலரும் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் என்ற பெருமையை கல்கி 2898 ஏடி உருவாகியுள்ளது. ரூ. 600 கோடி செலவில் பிரமாண்டமாக உருவான இந்த படம், உலக அளவில் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலை பெற்றுள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ. 600 கோடிக்கு மேல் படம் வசூலை ஈட்டியுள்ளது. தெலுங்கில் உருவான இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் வெளியானது.

படத்தின் விஷுவல் எபெக்ட்ஸ் காட்சிகள் பெருமளவில் பேசப்பட்டது. படத்தின் முதல் பலமாக இருக்கும் கிராஃபிக்ஸில் இருக்கும் விஷயங்கள் அனைத்தையும் பெரும் உழைப்பு கொடுத்து ஒவ்வொரு காட்சியையும் செதில், செதிலாக செதுக்கி இருக்கிறார்கள். அதேபோல் இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.