ஒரு வார முடிவில் 100 கோடி வசூலைப் பிடித்ததா கங்குவா? பாசிட்டிவ் ரிவ்யூக்கு மத்தியில் என்ன செய்தார் லட்சுமி நரசிம்மர்?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஒரு வார முடிவில் 100 கோடி வசூலைப் பிடித்ததா கங்குவா? பாசிட்டிவ் ரிவ்யூக்கு மத்தியில் என்ன செய்தார் லட்சுமி நரசிம்மர்?

ஒரு வார முடிவில் 100 கோடி வசூலைப் பிடித்ததா கங்குவா? பாசிட்டிவ் ரிவ்யூக்கு மத்தியில் என்ன செய்தார் லட்சுமி நரசிம்மர்?

Malavica Natarajan HT Tamil
Nov 22, 2024 07:47 AM IST

பெரும் விமர்சனங்களில் சிக்கித் தவித்த கங்குவா படம் தற்போது மக்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், அந்தப் படத்தின் வசூல் நிலவரம் குறித்து பார்ப்போம்.

ஒரு வார முடிவில் 100 கோடி வசூலைப் பிடித்ததா கங்குவா? பாசிட்டிவ் ரிவ்யூக்கு மத்தியில் என்ன செய்தார் லட்சுமி நரசிம்மர்?
ஒரு வார முடிவில் 100 கோடி வசூலைப் பிடித்ததா கங்குவா? பாசிட்டிவ் ரிவ்யூக்கு மத்தியில் என்ன செய்தார் லட்சுமி நரசிம்மர்?

இவர்களுடன் பாலிவுட் நடிகர் பாபி தியோல், நடராஜன் சுப்ரமணியம், கருணாஸ், போஸ் வெங்கட், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் இந்தப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். 

இந்நிலையில் கங்குவா திரைப்படம் சூர்யா கதாநாயகனாக நடித்து 2 வருடங்களுக்குப் பின் திரைக்கு வரும் படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் நவம்பர் 14ஆம் தேதி உலகெங்கும் 11,500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்தது. 

ஞானவேல் ராஜா போட்ட உத்தரவு

படத்தில் நடிகர் சூர்யா கத்திக்கொண்டே இருப்பதாக பெரும்பாலான விமர்சனங்கள் எழுந்தன. இதனால் கங்குவா திரையரங்கு உரிமையாளர்களிடம் வால்யூமை இரண்டு புள்ளிகள் குறைக்கச் சொல்லி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் சொல்லியிருக்கின்றனர். மேலும் கதை புரியவில்லை, எங்கள் டிக்கெட் பணம் வீணானது என ரசிகர்கள் புலம்பிய நிலையில், படம் வெளியான முதல் 3 நாட்களில் படத்தின் இயக்குநர், நடிகர்களை தனிப்பட்ட முறையிலும் மிக மோசமாக விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில், தற்போது சிலர் கங்குவா திரைப்படம் நன்றாக இருக்கிறது எனக் கூறி வரும் நிலையில், படம் வெற்றி பெற வேண்டி, இயக்குநர் சிறுத்தை சிவாவும், நடிகர் சூர்யாவும் சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

வசூல் நிலவரம்

இத்தகைய கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் கங்குவா திரைப்படம் வெளியான 8ம் நாளான நேற்று தமிழ்நாட்டில் 0.8 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கங்குவா படத்தின் வசூல் 35.63 கோடியாக உள்ளது.

8ம் நாளான நேற்று இந்திய அளவில் 73.65 கோடி ரூபாயும், உலகம் முழுவதும் 96 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக sacnilk இணையதளம் தெரிவித்துள்ளது.

கங்குவா எத்தனை கோடி வசூலிக்கும்?

கங்குவா திரைப்படத்தைப் பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ஓடிடி தளம் 80 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.ஜி.எஃப் 2 மற்றும் இந்தி, தெலுங்கு மொழிப் படங்கள் மட்டுமே இந்தச் சாதனையைச் செய்துள்ளன. இதுவரை எந்த தமிழ்ப் படமும் அந்த சாதனையை எட்டியதில்லை.

கங்குவாவால் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எட்ட முடியுமா என்று படத்தின் தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜாவிடம் செய்தியாளர்கல் கேட்டபோது, "நான் ரூ.2000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை எதிர்பார்க்கிறேன். அதை ஏன் ரூ.1000 கோடி என்று குறைத்து மதிப்பிடுகிறீர்கள்" என்று நம்பிக்கையுடன் பதிலளித்தார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.