Nithya Menon: தேசிய விருது வென்ற நித்யா மேனன் அடுத்து யாருடன் இணைக்கிறார் தெரியுமா?-actress nithya menon to join hands with sathya jothi films - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nithya Menon: தேசிய விருது வென்ற நித்யா மேனன் அடுத்து யாருடன் இணைக்கிறார் தெரியுமா?

Nithya Menon: தேசிய விருது வென்ற நித்யா மேனன் அடுத்து யாருடன் இணைக்கிறார் தெரியுமா?

Aarthi Balaji HT Tamil
Aug 23, 2024 05:29 PM IST

Nithya Menon: வீனஸ் பிக்சர்ஸ் கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் நான்கு தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வருகிறது, சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம்.

Nithya Menon: தேசிய விருது வென்ற நித்யா மேனன் அடுத்து யாருடன் இணைக்கிறார் தெரியுமா?
Nithya Menon: தேசிய விருது வென்ற நித்யா மேனன் அடுத்து யாருடன் இணைக்கிறார் தெரியுமா?

வீனஸ் பிக்சர்ஸ் கோவிந்தராஜன் மற்றும் சத்யா மூவிஸ் அருளாளர் ஆர். எம். வீரப்பன் ஆகிய திரையுலக ஜாம்பவான்களின் வழியில் நான்கு தலைமுறைகளாக திரைப்பட தயாரிப்பில் சாதனை படைத்து வருகிறது, சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம்.

டி. ஜி. தியாகராஜன் தயாரிப்பில், குடும்பத்துடன் ரசிக்கும் படங்களை இயக்குவதில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நித்யா மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.

1950 கள் முதல் மக்கள் திலகம் எம் ஜி ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாசன், அஜித் குமார், தனுஷ் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்த வெற்றி படங்களை தயாரித்துள்ள பாரம்பரியமிக்க இந்த குடும்பம் முதல் முறையாக இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உடன் கைகோர்ப்பதில் பெருமை கொள்கிறது. இத்திரைப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்க செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர்

கதைக்கு முக்கியத்துவம் கொண்ட, ஆறு முதல் அறுபது வரை அனைத்து தரப்பினரும் கண்டு களிக்கும் வகையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சமீபத்தில் தேசிய விருது வென்ற நித்யா மேனன் நாயகியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் நித்யா மேனன் விரைவில் பங்கேற்கிறார்.

இந்த திரைப்படத்தின் பெயர், இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த விவரங்கள் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.