Parvati Nair: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்..உண்மை விரைவில் வெளிவரும் - ஊழியரை தாக்கிய வழக்கில் பார்வதி ரியாக்சன்-parvati nair reaction to allegation on assaulting her former helper - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Parvati Nair: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்..உண்மை விரைவில் வெளிவரும் - ஊழியரை தாக்கிய வழக்கில் பார்வதி ரியாக்சன்

Parvati Nair: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்..உண்மை விரைவில் வெளிவரும் - ஊழியரை தாக்கிய வழக்கில் பார்வதி ரியாக்சன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 24, 2024 07:55 AM IST

Parvati Nair: ஊழியர் அடித்ததாக தன் மீது வழக்குப்பதிவு செய்த விவகாரத்தில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளதாகவும், உண்மை விரைவில் வெளிவரும் நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.

Parvati Nair: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்..உண்மை விரைவில் வெளிவரும் - ஊழியரை தாக்கிய வழக்கில் பார்வதி ரியாக்சன்
Parvati Nair: ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்..உண்மை விரைவில் வெளிவரும் - ஊழியரை தாக்கிய வழக்கில் பார்வதி ரியாக்சன்

தமிழ் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக தோன்றிய அருண் விஜய் ஜோடியாக நடித்த இவர், கமல்ஹாசனின் உத்தம வில்லன் படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் பார்வதி நாயர் நடித்திருந்தார்.

இதையடுத்து பார்வதி நாயர் தன்னை தாக்கியதாக அவரிடம் பணிபுரிந்த ஊழியர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக நடிகை பார்வதி உள்பட 7 பேர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார்.

பார்வதி ரியாக்சன்

சில தவறான தகவல்களும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் பரப்பப்படுகின்றன. நீதித்துறையின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, இதற்கு காரணமான அனைவருக்கும் எதிராக எனது சட்டக் குழு நடவடிக்கை எடுக்கும்.

உண்மை விரைவில் வெளிவரும். இந்த விஷயத்தில் எனது ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆதரவுக்கும் நன்றி." என குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர் மீது தாக்குதல்

சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் பார்வதி, கடந்த 2022இல் தனது வீட்டிலிருந்து ரூ. 10 லட்சம் மதிப்பிலான கடிகாரங்கள், ஐபோன், லேப்டாப் போன்றவை திருடப்பட்டிருப்பதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது வீட்டில் பணியாற்றி வந்த சுபாஷ் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, நடிகை பார்வதி நாயர் உட்பட 7 பேர், தன்னை வீட்டின் அறைக்குள் பூட்டி வைத்து தாக்கியதாக சுபாஷ் சந்திர போஸ் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில் தன் மீது போலியான குற்றச்சாட்டு சுமத்தப்ப்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து சுபாஷ் தனது புகாரை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பதிவு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சுபாஷின் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டார். இருப்பினும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமலே இருந்து வருகின்றனர் எனக் கூறி, சில நாட்களுக்கு முன் சுபாஷ் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

காவல்துறை நடவடிக்கை

இந்த விவகாரம் தொடர்பாக அடுத்தடுத்து சுபாஷ் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில், நடிகை பார்வதி நாயர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அதன்படி நடிகை பார்வதியுடன், அயலான் பட தயாரிப்பாளர் கொடப்பாடி ராஜேஷ் உள்பட 7 பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இரு தரப்பிலும் அளிக்கப்பட்ட புகார்களுக்கு போலீசார் தனித்தனியே விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

பார்வதி நாயர் படங்கள்

பார்வதி நாயர் நடிப்பில் இந்த ஆண்டில் மைலாளத்தில் சூப்பர் ஜிந்தகி என்ற படம் வெளியாகியுள்ளது. இதன் பின்னர் தளபதி விஜய் நடிப்பில் இம்மாதம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் தி கோட் படத்தில் பார்வதி நாயர் ஜூனியர் சாட்ஸ் ஆபிசராக தோன்றியிருப்பார்.

அதேபோல் வைபவ் ஜோடியாக ஆலம்பளா என்ற படத்தில் பார்வதி நாயர் நடித்துள்ளார். இந்த படம் வரு் டிசம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.