Top Cinema News: நடிகை மீது நகை திருட்டு புகார், பார்த்திபனின் டீன்ஸ் ஓடிடி ரிலீஸ்..இன்றைய டாப் சினிமா செய்திகள்-parthiban teenz ott release suriya pan india movie and more top cinema news today - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top Cinema News: நடிகை மீது நகை திருட்டு புகார், பார்த்திபனின் டீன்ஸ் ஓடிடி ரிலீஸ்..இன்றைய டாப் சினிமா செய்திகள்

Top Cinema News: நடிகை மீது நகை திருட்டு புகார், பார்த்திபனின் டீன்ஸ் ஓடிடி ரிலீஸ்..இன்றைய டாப் சினிமா செய்திகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 12, 2024 09:58 PM IST

Top Cinema News Today: பிரபல நடிகை மீது நகை திருட்டு புகார், பார்த்திபனின் டீன்ஸ் ஓடிடி ரிலீஸ், மலையாள இயக்குநர் இயக்கத்தில் சூர்யாவின் பான் இந்தியா படம் என இன்றைய டாப் சினிமா செய்திகள் பற்றி பார்க்கலாம்.

Top Cinema News: நடிகை மீது நகை திருட்டு புகார், பார்த்திபனின் டீன்ஸ் ஓடிடி ரிலீஸ்..இன்றைய டாப் சினிமா செய்திகள்
Top Cinema News: நடிகை மீது நகை திருட்டு புகார், பார்த்திபனின் டீன்ஸ் ஓடிடி ரிலீஸ்..இன்றைய டாப் சினிமா செய்திகள்

நாளை ஒரே படம் மட்டும் ரிலீஸ்

விவேக் குமார் இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், பிரியாமணி, சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கொட்டேஷன் கிங் திரைப்படத்தின் முதல் பாகம் நாளை (செப்டம்பர் 13) வெளியாகிறது. இந்த வாரத்தில் வெளியாகும் ஒரே படமாக இது அமைந்துள்ளது.

விமல் வழக்கு ரத்து

தனக்கு கடன் கொடுத்த கோபி, விநியோகஸ்தர் சிங்காரவேலன் ஆகியோர் மீது பணமோசடி புகார் அளித்திருந்தார் நடிகர் விமல். இந்த வழக்கில் கோபி தரப்பிலும் சிங்காரவேலன் தரப்பிலும் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

அதன் அடிப்படையில் மீது நடிகர் விமல் கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றத்திற்கான முகாந்திரம் எதுவும் இல்லை என தெரியவந்தது. இவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் எதையும் நடிகர் விமல் சமர்பிக்காத காரணத்தினால் வழக்கை மேல் விசாரணை ஏதுமின்றி முடித்து கொள்வதாக கூறி நீதிமன்றத்தில் விருகம்பாக்கம் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்தது. இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது

14 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சுந்தர் சி - வடிவேலு

2010இல் வெளியான நகரம் மறுபக்கம் படத்துக்கு பின்னர் சுந்தர் சி - வடிவேலு இணைந்து நடிக்க கேங்கர்ஸ் என்ற படம் உருவாகி வருகிறது. வடிவேலுவின் பிறந்தநாளான இன்று அந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

சென்சார் செய்யப்பட்ட கங்கனாவின் எமெர்ஜென்சி

பாலிவுட் டாப் நடிகை கங்கனா ரணவத் தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் எமெர்ஜென்சி படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்தில் இடம்பிடித்த 10 ஆட்சோபனைக்குரிய காட்சிகள் மாற்ற வேண்டும், 3 காட்சிகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது

மலையாள இயக்குநரின் பான் இந்தியா படத்தில் சூர்யா

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ஆர்டிஎக்ஸ் படத்தின் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் - நடிகர் சூர்யா ஆகியோர் சந்திப்பு நடத்தியுள்ளனர். அப்போது இருவரும் புதிய படத்தில் பணியாற்றுவது குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

சூர்யாவை வைத்து முழுநீள ஆக்‌ஷன் கதையை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் உருவாக்கியுள்ளதாகவும், பான் இந்தியா கதையாக இந்த படம் உருவாகும் என தகவல்கள் தெரிவித்துள்ளன.

சசிக்குமாருடன் இணையும் நடிகை சிம்ரன்

சசிக்குமார் நடித்திருக்கும் புதிய படமான நந்தன் வரும் 20ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சசிக்குமார் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை கடந்த சில நாள்களு முன் நடைபெற்றுள்ளது. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிகிறது.

புதிய கார் வாங்கிய வெங்கட் பிரபு

தளபதி விஜய் நடித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியிருக்கும் தி கோட் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததோடு, பாக்ஸ் ஆபிஸிலும் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குநர் வெங்கட் பிரபு விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

நடிகை மீது நகை திருட்டு புகார்

தெலுங்கு சினிமாக்களில் நடித்து வரும் ராஜ் தருண் மீது லாவண்யா என்ற பெண் தன்னை நடிகர் துன்புறுத்துவதாக புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவருடன் தான் 11 ஆண்டுகள் வாழ்ந்து வந்ததாகவும், தற்போது நடிகை மால்வி மல்கோத்ராவுடன் நெருக்கமாக பழகி வருவதோடு, தன்னை துன்புறுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

புகாரில், "எனக்கு சொந்தமான தங்க வளையல்கள், தாலி சரடு, பிரேஸ்லெட், செயின் போன்ற நகைகளை ராஜ் தருணுடன் இணைந்து மால்வி மல்கோத்ரா திருடிச் சென்று விட்டார். இவற்றின் மதிப்பு ரூ. 11 லட்சம்" எனவும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஓடிடியில் பார்த்திபனின் டீன்ஸ்

இளம் நடிகர்களை வைத்து நடிகர் பார்த்திபன் இயக்கி, நடித்திருக்கும் படம் டீன்ஸ். கடந்த ஜூன் மாதம் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த தகவலை நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

தெலுங்கில் கோடிகளில் நஷ்டமடைந்த தி கோட்

தளபதி விஜய் நடிப்பில் தமிழில் வசூலை குவித்து வரும் தி கோட் படத்தின் தெலுங்கு பதிப்பு பெரிய வரவேற்பை பெறவில்லை. தற்போது வரை படம் ரூ. 13 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணாக தி கோட் வசூலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.