லட்டு விவகாரத்தில் குட்டு வைத்தும் திருந்தாத நெட்டிசன்கள்.. பரிதாபத்திற்கு பரிதாபம்.. தீயாய் பரவும் வீடியோ!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  லட்டு விவகாரத்தில் குட்டு வைத்தும் திருந்தாத நெட்டிசன்கள்.. பரிதாபத்திற்கு பரிதாபம்.. தீயாய் பரவும் வீடியோ!

லட்டு விவகாரத்தில் குட்டு வைத்தும் திருந்தாத நெட்டிசன்கள்.. பரிதாபத்திற்கு பரிதாபம்.. தீயாய் பரவும் வீடியோ!

Divya Sekar HT Tamil
Sep 25, 2024 11:56 AM IST

Parithabangal : திருப்பதி லட்டு விவகாரத்தை கலாய்க்கும் விதமாக, லட்டு பாவங்கள் என்ற பெயரில் சமீபத்திய எபிசோடை பரிதாபங்கள் சேனல் நீக்கினாலும் சிக்கல் தான்.

Parithapangal  : லட்டு விவகாரத்தில் குட்டு வைத்தும் திருந்தாத நெட்டிசன்கள்.. பரிதாபத்திற்கு பரிதாபம்.. தீயாய் பரவும் வீடியோ!
Parithapangal : லட்டு விவகாரத்தில் குட்டு வைத்தும் திருந்தாத நெட்டிசன்கள்.. பரிதாபத்திற்கு பரிதாபம்.. தீயாய் பரவும் வீடியோ!

இந்துக்களின் மதநம்பிக்கையை புண்படுத்தும் விதமாக நடந்திருக்கும் இந்த நிகழ்வு தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவை ஆந்திர மாநில அரசு நியமித்துள்ளது.

பவன் கல்யாண் 11 நாள்கள் விரதம்

இந்த விவகாரத்தில், கடந்த ஜெகன்மோகன் ஆட்சிக்கு கண்டனம் தெரிவித்தும், திருப்பதி வெங்கடேசப் பெருமாளிடம் மன்னிப்புக்கோரும் விதமாகவும், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் 11 நாள்கள் விரதத்தைத் தொடங்கியுள்ளார்.

அதேபோல் திருப்பதி லட்டு விவகாரத்தில் கோயில் புனிதம் கெட்டுவிட்டதால், அதற்குப் பரிகாரமாக 3 நாட்கள் சிறப்பு யாகங்களையும் திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் செய்தது.

திருப்பதி லட்டு விவகாரத்தை கலாய்க்கும் பரிதாபங்கள்

இதனிடையே ட்ரெண்டிங் விவகாரங்களை வீடியோவாக செய்து வெளியீடும் யூடியூப் சேனல்கள் ஏகப்பட்டவை இருக்கிறது. அதில் முதல் நபராக நகைச்சுவையாக வீடியோ வெளியிட்டு தங்கள் சேனல்களுக்கு சென்று தனி ரசிகர்களை உருவாக்கி, யூடியூப்பில் கொடி கட்டிப் பறந்து வருவது தான், பரிதாபங்கள்.

இதனிடையே திருப்பதி லட்டு விவகாரத்தை கலாய்க்கும் விதமாக, ’லட்டு பாவங்கள் ‘ என்ற பெயரில் சமீபத்திய எபிசோடை பரிதாபங்கள் சேனல் வெளியிட்டது. வழக்கத்தை விட இந்த வீடியோ வெளியான சில மணி நேரத்தில் லட்சம் நபர்கள் மேல் பார்த்தனர்.

பலரும் எதிர்ப்பு

அதில், அவர்கள் சைவ உணவு உண்பவர்கள், இந்துக்கள் ஏமாற்றப்படுவதை கேலி செய்வது, பிராமணர்களை கேலி செய்வது மற்றும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் 11 நாள் பரிகாரம் செய்வதை கலாய்த்து உள்ளனர்.

திருப்பதி கோயில் கோபுரத்தைக் காட்டும் பின்னணியில் ஒரு தட்டில் லட்டுகளை வைத்திருப்பதையும் சேர்த்து உள்ளனர். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பரிதாபங்கள் சேனல் தற்போது அந்த வீடியோவை நீக்கி உள்ளது. மேலும் அதற்கு மன்னிப்பு தெரிவித்து பதிவும் வெளியீட்டு உள்ளார்கள்.

காணொலி நீக்கம்

இது குறித்து பரிதாபங்கள் சேனல் வெளியீட்டு இருக்கும் பதிவில், " கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருப்பதால் அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொலியை நீக்கி உள்ளோம் இது போல் வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்" என குறிப்பிடப்பட்டு உள்ளது.

தீயாய் பரவும் வீடியோ

திருப்பதி லட்டு விவகாரத்தை கலாய்க்கும் விதமாக, ’லட்டு பாவங்கள் ‘ என்ற பெயரில் சமீபத்திய எபிசோடை பரிதாபங்கள் சேனல் நீக்கினாலும் சிக்கல் தான். ஏனெனில்  இந்த வீடியோவை பரிதாபங்கள் சேனலில் இருந்து நீக்கினாலும் பலர் இந்த வீடியோவை டவுன்லோடு செய்து சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது தீயாய் பரவி வருகிறது. இதனால் பரிதாபத்திற்கு பரிதாபம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் அவர்கள் என்ன மாதிரியான பிரச்சனையை எதிர்கொள்ள போகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.