“அப்பவே பாலாவுக்கு அவ்வளவு திமிரு; விதண்டா வாத பேச்சு; ஓடுன்னு அனுப்பிட்டோம்”-‘நந்தா’-வில் நடந்த கூத்து”-பாலாஜி பிரபு
சூர்யா நடிப்பில், பாலா இயக்கத்தில் வெளியான ‘நந்தா’ படத்தில் நடந்த கசப்பான சம்பவங்கள் குறித்து பாலாஜி பிரபு பேசி இருக்கிறார்.
இயக்குநர் பாலா தன்னுடைய படைப்பில் கறாராக இருந்த போதும், மற்றவர்களிடம் அவர் நடந்து கொள்ளும் விதம், தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில், ‘நந்தா’ படத்தை முதலில் தயாரிக்க இருந்த ஆஸ்கார் மூவீஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், மறைந்த பிரபல இயக்குநருமான பாலாஜியின் மகன், பாலாஜி பிரபு மீடியா சர்க்கிள் யூடியூப் சேனலுக்கு, அந்தப்படத்தில் நடந்த சில கசப்பான சம்பவங்களை பகிர்ந்து இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ ‘நந்தா’ படத்தை தயாரிப்பதற்காக அந்தப்படத்தின் இயக்குநர் பாலாவை அழைத்துக் கொண்டு, நடிகர் சிவகுமார் என்னுடைய அப்பாவை சந்திக்க வந்தார். அப்போது அவர், சூர்யா ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கிறான். ஆகையால், நீங்கள் பாலா இயக்கும் இந்த படத்தை தயாரிக்க வேண்டும்” என்றார்.
எனக்கு தாய் வீடு
மேலும், அவர், “ஆஸ்கார் மூவிஸ் என்னுடைய தாய் வீடு போல; இந்த பேனரில் நான் கிட்டத்தட்ட நான்கு படங்கள் நடித்து இருக்கிறேன். அந்த உரிமையில் வந்து கேட்கிறேன். நீங்கள் உதவ வேண்டும் என்று கேட்டார். உடனே, என்னுடைய அப்பாவும் நிச்சயமாக செய்யலாம் என்று ஒத்துக் கொண்டார்.
அதன் பின்னர் பாலா சார் தனியாக என்னுடைய அப்பாவை பார்க்க வந்தார். கிட்டத்தட்ட நான்கு, ஐந்து மீட்டிங் பாலா சார் உடன் நடந்தது. அப்போது பாலா சாரிடம் அப்பா, நீங்கள் எத்தனை நாட்களில் படத்தை எடுப்பீர்கள், உங்களுக்கு எவ்வளவு பட்ஜெட் தேவைப்படும் உள்ளிட்ட விபரங்களை கேட்டார். அதற்கு பாலா, நான் எத்தனை நாட்களில் எடுப்பேன், எவ்வளவு பட்ஜெட் ஆகும் என்று சொல்ல முடியாது என்றார். இதைக்கேட்டவுடன் அப்பாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
காரணம் என்னுடைய அப்பா, பிரபல இயக்குநர் ஸ்ரீதர் சாரிடம் பயின்று வந்தவர். அப்போது, 45 நாட்கள் கால்சீட் என்றால், 45 ஆயிரம் அடிக்கு ஃபிலிம் தேவைப்படும் என்பது கணக்கு. அதை நீங்கள் எடிட் செய்யும்பொழுது, அது கிட்டத்தட்ட 13 ஆயிரம் அடியாக குறையும். அப்படி கணக்கு போட்டு வேலை பார்த்து கொண்டு கொண்டிருந்த நேரத்தில், பாலா இப்படி பேசியது அப்பாவுக்கு ஷாக்கிங் ஆக இருந்தது.
இதையடுத்து சரி நான் சொல்லி விடுகிறேன் என்று சொல்லி, பாலாவை அப்பா அனுப்பி விட்டார். இறுதியாக, சிவகுமார் சாருக்கு அப்பா போன் செய்து, வாத்தியாரே… இது சரியாக வராது. நான் எப்படி படம் எடுப்பேன் என்று உங்களுக்கு நன்றாக தெரியும். ஆனால் பாலா பேசுவது வேறு மாதிரியாக இருக்கிறது. ஆகையால் இந்த படத்தை இணைந்து எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.” என்று சொல்லிவிட்டார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்