17 படங்களில் கிருஷ்ணர் வேடம்..கடவுளாக பாவிக்கப்பட்டவர்! ராமனாகவும், ராவணனாகவும் நடித்த ஒரே நடிகர் பற்றி தெரியுமா?
கிருஷ்ணர் வேடத்தில் 17 படங்களில் என்.டி.ராமாராவ் நடித்துள்ளார். இதுவொரு சாதனையாகவே அமைந்துள்ளது. அத்துடன் ராமராகவும், ராவணனாகவும் நடித்த ஒரே நடிகர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.

நாடு முழுவதும் தசரா கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீமைக்கு எதிரான நன்மையின் அடையாளத்தின் வெற்றியாக இந்த நாள் அமைந்துள்ளது. இந்து மரபின்படி, இலங்கை சேர்ந்த அசுரகுல மன்னன் ராவணன் மீது ராமர் தனது வெற்றியைப் பதிவு செய்ததை குறிப்பதாக உள்ளது. ராமயணத்தின் மையக்கதையாக இருக்கும் இந்த நிகழ்வு பல் இந்திய மொழிகளில் சினிமாக்கள் வெளியாகியுள்ளன.
ராமாயண கதையில் ராமர், ராவணன் கதாபாத்திரங்களில் தோன்றும் நடிகர்கள் தங்களது தனித்துவமான நடிப்பால் பார்வையாளர்கள் மனதை கவர்ந்திருப்பார்கள். ராமர் ஹீரோவாகவும், ராவணன் வில்லனாகவும் காட்டப்படும் இந்த கதையில் ராமன் மற்றும் ராவணனாக நடித்த ஒரே நடிகர் என்ற பெருமை பெற்றவராக உள்ளார் தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரான மறைந்த என்.டி.ராமராவ்.
கடவுள் வேடங்களில் அவதரித்த என்டிஆர்
என்டிஆர் என மக்களால் கொண்டாடப்பட்ட என்.டி. ராமாராவ், திரையில் கடவுள்களின் அவதாரத்தில் தோன்றும் நடிகர்களில் முக்கியமானவராக இருந்துள்ளார். இந்த கால ஜெனரேஷன் ரசிகர்களுக்கு ஜூனியர் என்டிஆர் பற்றி தெரிந்து அளவு என்டிஆர் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.