கோயிலிலும் கிடைக்காத நிம்மதி.. கயலின் கழுத்தை சுற்றும் அடுத்த நெருக்கடி.. கயல் சீரியல் அப்டேட்
சரவண வேலுவின் அப்பா உயிரிழந்ததற்கு கயலின் அப்பா தான் காரணம் என கயலை சுற்றி புதிய பிரச்சனை உருவெடுத்துள்ளது.

திருமணம் முடிந்த கையோடு கயல் தன் சொந்த ஊரில் உள்ள கோயிலுக்கு சென்று பொங்கல் வைக்க குடும்பத்துடன் செல்லும் போது ஒவ்வொரு பிரச்சனையாக வருகிறது.
கயல் குடும்பத்திடம் சண்டையிடும் மக்கள்
கோயிலுக்கு சென்ற கயல் குடும்பத்தை அவரது தந்தை ஊரில் உள்ளவர்களின் பணத்தை ஏமாற்றி சென்றதாகவும், கயல் குடும்பம் உடனடியாக ஊரைவிட்டு வெளியே போக வேண்டும் எனவும் ஊரில் உள்ளவர் சண்டைக்கு வருகின்றனர். இதனால் என்ன செய்வது என அறியாமல் கயல் குடும்பம் தவித்து வந்தது. இந்த சமயத்தில் கயல் குடும்பம் ஊருக்கு வந்ததை அறிந்த சரவண வேலு, பல வருடங்களுக்குப் பின் ஊருக்கு வந்த கயலைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தாார்.
சரவண வேலுவின் திட்டம்
ஆனால், கோயிலுக்கு சென்று பார்க்கும் போது தான் தெரிந்தது கயலுக்கு திருமணம் ஆனது. இதனால், ஒரு பக்கம் கோபமடைந்தாலும், முதலில் ஊர் மக்களிடம் இருந்து கயலை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், ஊரார் முன் கயல் குடும்பத்திற்காக பரிந்து பேசினார்.