தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bollywood Art Director Desai: லகான் பட கலை இயக்குநர், தேசிய விருது வெற்றியாளர் தேசாய் தூக்கிட்டு தற்கொலை

Bollywood Art Director Desai: லகான் பட கலை இயக்குநர், தேசிய விருது வெற்றியாளர் தேசாய் தூக்கிட்டு தற்கொலை

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 02, 2023 10:40 AM IST

தேசிய விருது பெற்ற கலை இயக்குநரான நிதின் சந்திரகாந்த் தேசாய் தனது ஸ்டியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவருக்கு வயது 58.

பாலிவுட் இயக்குநர் நிதின் சந்திரகாந்த் தேசாய்
பாலிவுட் இயக்குநர் நிதின் சந்திரகாந்த் தேசாய்

ட்ரெண்டிங் செய்திகள்

கலை இயக்குநர் தேசாய் உயிரிழப்பு பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவர் கடந்த ஆண்டில் சந்திரகாந்த் புரொடக்‌ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி, தேஷ் தேவி என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளாராக உருவெடுத்தார்.

இதையடுத்து அவர் மும்பையில் உள்ள தனது என். டி. ஸ்டுடியோவில் வைத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பல்வேறு இந்தி, மராத்தி படங்கள், வரலாற்று தொடர்களில் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். தேசாய் உயிரிழப்புக்கு திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நிதின் சந்திரகாந்த்தேசாய் 1987 முதல் பாலிவுட் படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்ற தொடங்கினார். 2005இல், அவர் கர்ஜத் பகுதியில் தனது என்.டி.ஸ்டுடியோ அமைத்தார். அவர் அதே ஸ்டுடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நிதின் சந்திரகாந்த் தேசாய் கடன் காரணமாக நிதி பிரச்னையில் சிக்கி இருந்தது தெரியவந்துள்ளது. இதனால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன் நிதின் தேசாயின் என். டி. ஸ்டுடியோவில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட பொருள் சேதத்தால் கடுமையான நிதி நெருக்கடியில் அவர் தள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதின் சந்திரகாந்த் தேசாய் நான்கு முறை சிறந்த கலை இயக்குநருக்கான விருதையும், மூன்று முறை பிலிம் பேர் விருதையும் வென்றுள்ளார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9  

IPL_Entry_Point

டாபிக்ஸ்