Nikhila Vimal: ‘மாட்டுக்கறி விவகார சர்ச்சைப்பேச்சு.. கிளாமர் ரோல்ல நீங்க எதிர்பார்க்குறதெல்லாம் என்னால’ - நிகிலா விமல்!-nikhila vimal latest interview about why her not choose glamour roles and political controversy - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nikhila Vimal: ‘மாட்டுக்கறி விவகார சர்ச்சைப்பேச்சு.. கிளாமர் ரோல்ல நீங்க எதிர்பார்க்குறதெல்லாம் என்னால’ - நிகிலா விமல்!

Nikhila Vimal: ‘மாட்டுக்கறி விவகார சர்ச்சைப்பேச்சு.. கிளாமர் ரோல்ல நீங்க எதிர்பார்க்குறதெல்லாம் என்னால’ - நிகிலா விமல்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 19, 2024 07:01 AM IST

Nikhila Vimal: சில படங்களில் நான் பணியாற்றும் பொழுது, அவர்கள் சொல்லும் கருத்துக்கு முரண்பாடாக, நான் என்னுடைய கருத்தை சொல்வேன். அப்போது அவர்கள் நீங்கள் பாவமாக இருப்பீர்கள் என்று எதிர்பார்த்தால், இப்படி பேசுகிறீர்கள் என்பது போல என்னை பார்ப்பார்கள். - நிகிலா விமல்!

Nikhila Vimal: ‘மாட்டுக்கறி விவகார சர்ச்சைப்பேச்சு.. கிளாமர் ரோல்ல நீங்க எதிர்பார்க்குறதெல்லாம் என்னால’ - நிகிலா விமல்!
Nikhila Vimal: ‘மாட்டுக்கறி விவகார சர்ச்சைப்பேச்சு.. கிளாமர் ரோல்ல நீங்க எதிர்பார்க்குறதெல்லாம் என்னால’ - நிகிலா விமல்!

கிளாமர் ரோலில் நடிக்க மாட்டீர்களா..?

இது குறித்து அவர் பேசும் போது, “ சில பேர் என்னை நீங்கள் கிளாமர் ரோலில் நடிக்க மாட்டீர்களா... என்று கேட்பார்கள். ஒருவேளை எனக்கு கிளாமர் என்று படுவது, அவர்களுக்கு வேறு மாதிரியாக பட்டிருக்கலாம். ஆனால் என்னை இந்த வகையில் கேட்டு வருபவர்கள், அவர்களுக்கு பிடித்த வகையிலேயே நான் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வருவார்கள். ஒரு படத்தை நாம் தேர்வு செய்யும் பொழுது, அது நமக்கு பிடித்ததாகவும் இருக்க வேண்டும் அல்லவா..?

சில படங்களில் நான் பணியாற்றும் பொழுது, அவர்கள் சொல்லும் கருத்துக்கு முரண்பாடாக, நான் என்னுடைய கருத்தை சொல்வேன். அப்போது அவர்கள் நீங்கள் பாவமாக இருப்பீர்கள் என்று எதிர்பார்த்தால், இப்படி பேசுகிறீர்கள் என்பது போல என்னை பார்ப்பார்கள். அந்த சமயத்தில் எனக்கு ஒரே ஒரு கேள்விதான் வரும். நீங்கள் என்னை கேட்டு வரும் பொழுது, எந்த நடிகரை பிடிக்கும் உள்ளிட்ட கேள்விகளைதான் கேட்கிறீர்கள். நான் என்ன மாதிரி இந்த உலகத்தை பார்க்கிறேன் உள்ளிட்ட கேள்விகளையெல்லாம் நீங்கள் கேட்பதில்லையே

 

 

மாட்டுக்கறி விவகாரம்..

நான் ஒரு பேட்டியில் மாட்டுக்கறி விவகாரம், கல்யாண விஷயம் உள்ளிட்டவற்றை பற்றியெல்லாம் பேசினேன். அது அரசியல் ரீதியாக என்னுடைய சித்தாந்த கருத்துகளாக வெளிப்பட்டு விட்டன. ஒரு சில குழுவிற்கு எதிராக நாம் கருத்துக்களை கூறும் பொழுது, அவர்கள் நம்மை கெட்ட வார்த்தையால் திட்டுவார்கள். நம் வீட்டில் உள்ளவர்களை அசிங்கமாக பேசுவார்கள்.

 

ஒரு சிலர், இந்த பெண் சரியாக பேசுகிறாள் என்று கூட கூறுவார்கள். ஆனால், அவர்களுக்கு எதிராக நாம் வேறு ஏதாவது பேசிவிட்டால், அவர்களும் நமக்கு எதிராக திரும்பி விடுவார்கள். அப்படி என்றால் இவ்வளவு நாட்கள் ஏன் அதைப் பற்றி எல்லாம் பேசவில்லை என்று கேட்டால், நீங்கள் அதைப் பற்றி என்னிடம் கேட்கவில்லை என்பதே என்னுடைய பதிலாக இருக்கும். என்னிடம் கேட்காமல் நான் அது போன்ற விஷயங்களை எப்படி பேச முடியும். நான் அரசியல்வாதி கிடையாது. அரசியலிலும் இல்லை.

பதில் கொடுக்க மாட்டேன்:

ஆனால், இது போன்ற விஷயங்களில் நான் கூறிய கருத்திற்கு எதிர்கருத்து கூறும் போது, அதற்கு பதில் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால், நான் அவர்களுக்கு பதில் கூற மாட்டேன் காரணம் என்னவென்றால், அவர்கள் அதை பெரிதாக ஊதி பெரிதாக்கி, கன்டென்ட்டாக மாற்றுவார்கள். இப்படியான தொனியில் நாம் இருக்கும் பொழுது நம்மை திமிர் பிடித்தவர்கள் என்று கூட சொல்வார்கள்.

ஆனால், ஒரு பெண்ணாக பதில் கொடுக்க வேண்டிய சமயங்களில் அமைதியாக இருந்து, அதை கடந்து செல்லும் பொழுது, பின்னாளில் அந்த இடத்தில் நாம் பதில் கொடுத்து இருக்க வேண்டுமே என்ற குற்ற உணர்வு உறுத்தும். சில பெண்கள் உடல் ரீதியாக முன்னால் தன்னை ஒரு ஆண் அணுகியதை, அந்த சமயத்தில் பேசாமல், பின்னாளில் பேசுவது இங்கு ஆண்கள் மத்தியில் கேள்வி பொருளாக மாற்றப்பட்டுள்ளது. அப்போது ஏன் பேசவில்லை என்ற ரீதியில் அவர்கள் தங்களது கேள்விகளை முன் வைக்கிறார்கள்.

ஒரு ஆண் தரப்பிலிருந்து இவ்வாறான தவறான அணுகுமுறைக்கு திட்டுவதோ அல்லது அடிப்பது பதிலாக இருக்கிறது. அது போன்ற எமோஷன் ஆண் தரப்பில் இருந்து வெளிப்படுகிறது. ஆனால், ஒரு பெண் தரப்பில் பார்க்கும் பொழுது, எங்களுக்கு அந்த சமயத்தில் அந்த எமோஷனில் இருக்கும்பொழுது, அதைப்பற்றி பேச முடியாத ஒரு சூழ்நிலையானது, எங்களுக்குள்ளேயே நிலவுகிறது. பின்னாளில் அதைப்பற்றி பேசுவதற்கு ஏற்ற சூழ்நிலை, எமோஷன் உள்ளிட்டவை வரும் போது நாங்கள் அதை வெளிப்படுத்துகிறோம். அது பெண்களுக்கான எமோஷனாக இருக்கிறது என்று தான் நினைக்கிறேன்.” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.