Nayanthara: வித்தியாசமாக காதுகுத்தி கொண்ட நயன்..ஆவேசம் இல்லுமினாட்டி பாடலுக்கு க்யூட் டான்ஸ்-nayanthara does a happy dance after getting her ears pierced in greece watch - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nayanthara: வித்தியாசமாக காதுகுத்தி கொண்ட நயன்..ஆவேசம் இல்லுமினாட்டி பாடலுக்கு க்யூட் டான்ஸ்

Nayanthara: வித்தியாசமாக காதுகுத்தி கொண்ட நயன்..ஆவேசம் இல்லுமினாட்டி பாடலுக்கு க்யூட் டான்ஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 26, 2024 05:57 PM IST

Nayantara: கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது இரட்டை பிள்ளைகளான உயிர், உலகம் ஆகியோருடன் க்ரீஸ் நாட்டுக்கு விடுமுறை கொண்டாட சென்றிருக்கும் நயன்தாரா, அங்கு வித்தியாசமாக காதுகுத்தி கொண்டார். ஆவேசம் இல்லுமினாட்டி பாடலுக்கு க்யூட் டான்ஸ் ஆடி அந்த விடியோவை பகிர்ந்துள்ளார்.

Nayanthara: வித்தியாசமாக காதுகுத்தி கொண்ட நயன்..ஆவேசம் இல்லுமினாட்டி பாடலுக்கு க்யூட் டான்ஸ்
Nayanthara: வித்தியாசமாக காதுகுத்தி கொண்ட நயன்..ஆவேசம் இல்லுமினாட்டி பாடலுக்கு க்யூட் டான்ஸ்

தமிழ் மலையாளம் என கிட்டத்தட்ட அரைடஜன் படங்கள் தற்போது நயன்தாரா கைவசம் இருக்கின்றன. என்னதான் சினிமா ஷுட்டிங் என ஒரு புறம் பிஸியாக இருந்தாலும் தனது குடும்பதுக்கான நேரத்தை செலவழிப்பதில் முக்கியத்துவம் அளித்து வரும் நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளை, தன் இரட்டை பிள்ளைகளான உயிர், உலகம் ஆகியோருடன் இணைந்து துபாயில் வைத்து கொண்டாடியுள்ளார்.

க்ரீஸ் நாட்டில் நயன்தாரா

இந்த கொண்டாட்டத்துடன் நாடு திரும்பாமல் தற்போது க்ரீஸ் நாட்டுக்கு சென்றிருக்கும் நயன்தாரா, அங்கு விடுமுறையை கொண்டாடி வருகிறார். தனது வெக்கேஷன் புகைப்படங்கள் பலவற்றை பகிர்ந்து லைக்ஸ்களை குவித்து வருகிறார் நயன்.

காது குத்திக்கொண்ட நயன்

இதையடுத்து க்ரீஸ் நாட்டில் வைத்து வித்தியாசமாக காது குத்திக்கொண்ட நயன், அந்த தருணத்தில் தனக்கு ஏற்பட்ட ஆர்வம், உச்சம், பயம் என அனைத்து உணர்வுகளை கலந்த விடியோவை பகிர்ந்துள்ளார்.

நயன்தாரா பகிர்ந்திருக்கும் விடியோவில், "ஆஹா என்னெவொரு அழகான காதுகள்" என்று சொல்லுங்கள் என #KaadhuMa என்கிற ஹேஷ்டாக்குடன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தன்னை தானே ஊக்குவித்துக்கொள்ளும் விதமாக "என்னால் முடியும் தோழா", "நான் பிறந்ததில் இருந்தே ரெடி" எனவும் பேசி, காது குத்தியபின், பகத் பாசில் ஆவேசம் படத்தில் இடம்பெறும் இல்லுமினாட்டி பாடல் பின்னணியில் ஒலிக்க நடனமாடியுள்ளார்.

ரசிகர்கள் கமெண்ட்

பொதுவாக தனது தனிப்பட்ட, குடும்ப புகைப்படங்களை பகிரும் நயன்தாரா எப்போதாவது தான் விடியோக்களை ஷேர் செய்வதுண்டு. அந்த வகையில் நயன்தாராவின் க்யூட் தருணங்களை கொண்டிருக்கும் இந்த விடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. "காதுமா சோ க்யூட்", "சேச்சி சோ க்யூட்", "காதுமா சூப்பர் மா" என ரசிகர்கள் பலரும் ஜாலியான கமெண்டுகளை பகிர்ந்துள்ளனர்.

முன்னதாக, விக்னேஷ் சிவன் பிறந்தநாளை கடந்த வாரம் துபாயில் வைத்து கொண்டாடினார் நயன்தாரா. அதன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார். நண்பர்கள் படை சூழ கணவர் விக்னேஷ் சிவன் பிறந்தநாளுக்கு கேக் வெட்டிய அந்த புகைப்படமும், நயன் - விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்த சில ரொமாண்டிக் புகைப்படம் லைக்குகளை குவித்தது.

அதன் பின்னர் க்ரீஸ் நாட்டில் தனது குழந்தைகளுடன் இருக்கும் க்யூட் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 

நயன்தாரா புதிய படங்கள்

நயன்தாரா தற்போது டெஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் மாதவன், சித்தார்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இது தவிர தனி ஒருவன் 2, குட் பேட் அக்லி, மூக்குத்தி அம்மன், மகாராணி என எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படங்களில் நடித்து வருகிறார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.