Story of Song Sambo Siva Sambo: மனதில் ஓடிக்கொண்டிருந்த டியூன்..பாடல் ஒலிக்கவிட்டு சேஸிங் காட்சி ஷுட்டிங்
Story of Song Sambo Siva Sambo: இயக்குநர் சமுத்திரகனி திருவிழா பாடலை இசையமைக்க சொன்னபோதிலும், மனதில் ஓடிக்கொண்டிருந்த டியூன் ஆக ஜகடம் ஜகடம் பாடல் இருந்தது. எனவே அதை முதலில் இசையமைத்து தர அந்த பாடல் ஒலிக்கவிட்டு சேஸிங் காட்சி ஷுட்டிங் செய்தனர்.
தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் செட்டராக அமைந்த படங்களில் சமுத்திரகனி இயக்கத்தில் சசிக்குமார் நடித்த நாடோடிகள் படமும் ஒன்றாக உள்ளது. காதல், பேமிலி சென்டிமெண்ட், நட்பு, கோபம் என அனைத்து மனித உணர்வுகளை கலந்த படையைலாக வந்த இந்த படம் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை தந்ததுடன் வசூலில் பட்டையை கிளப்பியது.
இந்த படம் பெற்ற வெற்றியால் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஒரு கதையின் க்ளைமாக்ஸ் காட்சியை இடைவேளையாக வைத்து அதன் பின்னர் நடக்கும் விஷயங்களை எதிர்பாராத திருப்பங்களுடன் சொன்ன விதத்தில் நாடோடிகள் தனித்துவ படமாக அமைந்தது.
பரபரப்பான இடைவேளை காட்சி
காதலர்கள் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி நண்பர்கள் இணைந்து சேர்த்து வைக்கும் சீன் ஆக நடோடிகள் இடைவேளை காட்சி இருக்கும். விறுவிறுப்பும், திருப்பமும் சற்றும் குறைவில்லாமல் இருக்கும் இந்த காட்சி படம் பார்ப்பவர்களை சீட் நுனிக்கே கொண்டு வந்தது. காதலுக்காக நண்பர்கள் செய்யும் தியாகத்தை எடுத்துக்கூறும் விதமாக இந்த பாடல் பரபர காட்சிகளுடன் பேக்ரவுண்டில் சம்போ சிவ சம்போ என்ற பாடல் ஒலிக்க அமைந்திருக்கும். படம் வெளியான காலகட்டத்தில் இந்த காட்சி வெகுவாக பேசப்பட்டது.
பாடல் ஒலிக்கவிட்டு படமாக்கப்பட்ட காட்சி
இந்த பாடல் உருவான விதம் பற்றி படத்தின் இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு பேட்டி ஒன்றில், "நாடோடிகள் படத்தில் இடம்பெறும் திருவிழா பாடலை தான் முதிலில் இயக்குநர் சமுத்திரக்கனி இசையமைக்க சொன்னார். ஆனால் என் மனதில் ப்ரீ இண்டர்வெல் போர்ஷான வரும் சம்போ சிவ சம்போ பாடல் தான் மனதில் இருந்துத. அதிலும் அந்த பாடலில் வரும் ஜகடம் ஜகடம் என்ற வரிகள் மனதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
இதனால் முதலில் ஜகடம் ஜகடம் பாடலை இசையமைத்தேன். அதை சமுத்திரக்கனிக்கு போட்டுக்காட்டியதும் மிகவும் பிடித்துபோனது. எனவே படத்தில் திருப்புமுனையாக வரும் இடைவேளை காட்சியை படமாக்கும்போது ஜகடம் ஜகடம் பாடலை பின்னணியில் ஒலிக்கவிட்டுதான் படமாக்கினார்.
முதலில் ஜகடம் ஜகடம் என்று வரிகள் மட்டும் இடம்பிடிதிருந்த அந்த பாடலுக்கு முழு வரிகளை எழுத இயக்குநர் முடிவு செய்தார். இதற்காக கவிஞர் யுகபாரதியை அணுகினார். பாடல் வரிகளை யுகபாராதி எழுதி முடித்தவுடன் சங்கர் மகாதேவன் பாடலை பாடினால் சிறப்பாக இருக்கும் என அவரை அணுகினோம்.
அவரும் இந்த பாடை பாடி முடித்த பின்னர் சிறப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருப்பதாக கூறினார்" என்றார்.
சண்டை காட்சியுடன் இடம்பிடித்த பாடல்
நாடோடிகள் படத்தில் இந்த பாடல் மற்றும் மியூசிக் மொத்தம் 7 நிமிடம் இடம்பிடித்திருக்கும். இதில் முழுவதும் சண்டை, சேசிங் காட்சிகள் என இடம்பிடித்து தமிழ் சினிமாவின் சிறந்த இண்டரவல் பிளாக் என கொண்டாடப்பட்டது.
விஜய் நடித்த லியோ இண்டர்வெல் பிளாக் ஏற்படுத்திய தாக்கத்துக்கெல்லாம் முன்னோடியாக திகழ்கிறது நாடோடிகள் படத்தின் ஜகடம் பாடல். இந்த படத்தின் க்ளைமாக்ஸிலும் மீண்டும் ஜகடம் பாடல் இடம்பிடித்திருக்கும். அந்த காட்சிக்கும் மிகவும் பொருத்தமாகவே இருக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்