Naadodigal: நண்பனின் நண்பன் நமக்கும் நண்பனே - நட்புக்காக உயிர் கொடுக்கும் நாடோடிகள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Naadodigal: நண்பனின் நண்பன் நமக்கும் நண்பனே - நட்புக்காக உயிர் கொடுக்கும் நாடோடிகள்!

Naadodigal: நண்பனின் நண்பன் நமக்கும் நண்பனே - நட்புக்காக உயிர் கொடுக்கும் நாடோடிகள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Jun 26, 2023 05:15 AM IST

14 years of Naadodigal: நாடோடிகள் திரைப்படம் இன்றுடன் வெளியாகி 14 ஆண்டுகள் ஆகின்றன.

நாடோடிகள் திரைப்படம்
நாடோடிகள் திரைப்படம்

நாடோடிகள் திரைப்படம், 14 ஆண்டுகள் நாடோடிகள், தமிழ் திரைப்படம், நடிகர் சசிகுமார், நடிகர் சமுத்திரக்கனி, தமிழ் சினிமா

நாடோடிகள் திரைப்படம் இன்றுடன் வெளியாகி 14 ஆண்டுகள் ஆகின்றன.

அன்றாட வாழ்க்கையில் நிகழக்கூடிய சம்பவங்களை வைத்து திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. கற்பனைக் கதைகளைக் கொண்டும் பல்வேறு சினிமாக்கள் இங்கு வெற்றி அடைந்துள்ளன. நம் வாழ்க்கையில் நடக்கக்கூடிய சம்பவங்களைப் படமாக எடுத்தாலும் அவை வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறி தான்.

தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கக் கூடிய சமுத்திரக்கனி ஒரு சிறந்த இயக்குநர் ஆவார். அவருடைய இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த திரைப்படம் தான் நாடோடிகள்.

குடும்ப வாழ்க்கையையும் நட்பையும் காதலையும் முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்ட படைப்புதான் இந்த திரைப்படம். நட்புக்காகத் திரைப்படங்களின் பட்டியல் எடுக்கப்பட்டால் அதில் முன்னிலை வகிப்பது இந்த நாடோடிகள் திரைப்படம் தான்.

கதை

ஜாலியாக ஒரு கிராமத்தில் நண்பர்களாக இருக்கக்கூடியவர்கள், தனது நண்பர் விரும்பக்கூடிய பணக்கார வீட்டுப் பெண்மணியைச் சேர்த்து வைப்பதற்காக இந்த நண்பர்கள் ஒன்று கூடுகின்றனர். இரண்டு பேரும் பெரிய இடத்துப் பிள்ளைகள் என்ற காரணத்தினால் பெற்றோர்கள் அவர்களின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனால் இரண்டு பேரையும் சேர்ப்பதற்காக இந்த மூன்று நண்பர்களும் படாத பாடு பட்டு அவர்களைச் சேர்த்து வைத்து அனுப்பி விடுகின்றனர். இந்தப் போராட்டத்தில் மூன்று பேரின் வாழ்க்கையில் சீரழிந்து விடுகின்றது. ஆனால் நண்பனின் காதலைச் சேர்த்து வைத்து விட்டோம் என்ற மனத்திருப்தியில் மூன்று பேரும் சமையல் கான்ட்ராக்ட் வேலை செய்து வருகின்றனர்.

நாடோடிகள்
நாடோடிகள்

சிறிது காலத்தில் வாழ்க்கையில் ஜாலியாக கழித்து விட்டு அந்த காதலர்கள் இருவரும் பிடிக்கவில்லை என கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து விடுகின்றன. இந்த மூன்று மூன்று பேரின் நண்பனான காதலன் வேறொரு பெண்ணையும், அந்தக் காதலில் வேறொரு ஆணையும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கின்றனர்.

இவர்களைச் சேர்த்து வைத்த அந்த மூன்று நண்பர்களுக்கும் விஷயம் தெரிந்து விடுகிறது. உடனே அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என மீண்டும் இருவரையும் அவர்கள் கடத்துகின்றனர். அங்குதான் ட்விஸ்ட் வருகிறது. இந்த படத்தின் கிளைமேக்ஸ் தான் இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியாகும்.

இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்து மிகப்பெரிய வெற்றி பெற்றன. அதிலும் சம்போ சிவ சம்போ என்ற பாடல் இன்றுவரை நண்பனின் காதலைச் சேர்த்து வைக்கும் நண்பர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சசிகுமார் இந்த திரைப்படத்தில் நாயகனாக நடித்திருப்பார். படத்திற்கு ஏற்ற கதாபாத்திரமாக சசிகுமார் பொருந்தி இருந்ததே இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வெற்றியாகும்.

ஊதாரியா திரியிற பசங்க என்று பலர் கமண்ட் கொடுத்தாலும், இந்த உலகத்தில் நல்ல செயல்களைச் செய்யக்கூடிய இளைஞர்கள் அவர்கள்தான் என இந்த படத்தின் மூலம் இயக்குநர் சமுத்திரக்கனி வெளிப்படுத்தியிருப்பார்.

இந்த திரைப்படம் இன்றுடன் வெளியாகி 14 ஆண்டுகள் ஆகின்றன. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்த திரைப்படம் அழியாமல் தமிழ் சினிமாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.