கமலா ஹாரிஸுக்கு பிரச்சாரம் செய்யும் இசைப்புயல்.. அமெரிக்காவை தெரிக்க விடப்போகும் ரகுமான் கச்சேரி?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கமலா ஹாரிஸுக்கு பிரச்சாரம் செய்யும் இசைப்புயல்.. அமெரிக்காவை தெரிக்க விடப்போகும் ரகுமான் கச்சேரி?

கமலா ஹாரிஸுக்கு பிரச்சாரம் செய்யும் இசைப்புயல்.. அமெரிக்காவை தெரிக்க விடப்போகும் ரகுமான் கச்சேரி?

Malavica Natarajan HT Tamil
Oct 12, 2024 02:08 PM IST

அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள கமலா ஹாரிஸை ஆதரித்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசைக் கச்சேரி நடத்த உள்ளதாகத் தெரிகிறது.

கமலா ஹாரிஸுக்கு பிரச்சாரம் செய்யும் இசைப்புயல்.. அமெரிக்காவை தெரிக்க விடப்போகும் ரகுமான் கச்சேரி?
கமலா ஹாரிஸுக்கு பிரச்சாரம் செய்யும் இசைப்புயல்.. அமெரிக்காவை தெரிக்க விடப்போகும் ரகுமான் கச்சேரி?

அமெரிக்க அதிபர் தேர்தல்

அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

கமலா ஹாரிஸுக்கு கூடும் ஆதரவு

தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடனுக்கு வயதாகிவிட்டதால், அவருக்குப் பதிலாக தற்போது துணை அதிபரகா உள்ள கமலா ஹாரிஸை ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவித்துள்ளது.

இதையடுத்து இவர்,தனது போட்டியாளரான ட்ரம்பை எதிர்த்து பல இடங்களில் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். அத்துடன் பெண்களுக்காக சில முக்கிய திட்டங்களை கொண்டுவர உள்ளதாகவும் அறிவித்து இளைஞர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.

இதுவரை நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், கமலா ஹாரிஸுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் எனவும், அவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகியுள்ளது எனவும் செய்திகள் வெளிவருகின்றன.

கமலாவிற்காக களமிறங்கும் ரகுமான்

இந்நிலையில், அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரகுமான், கமலா ஹாரிஸை ஆதரித்து தற்போது 30 நிமிட பிரச்சார பாடல் ஒன்றை தயாரித்துள்ளாராம். இந்தப் பாடல் அவரது பிரச்சாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் என பலதரப்பிலிருந்தும் தகவல் வருகிறது.

இதற்கிடையில், அவர் கமலா ஹாரிஸை ஆதரித்து ஆசிய-அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பு தேர்தல் பணிகள் சிலவற்றில் உதவி வருகிறது. இந்த அமைப்பு நிதி திரட்டுவது, வாக்காளர்களை ஈர்க்கும் விதமாக நிகழ்ச்சிகளை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசைக் கச்சேரி நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

30 நிமிட பிரச்சார பாடல்

இது இந்திய வம்சாவளி வாக்காளர்களை கவரும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலில் கமலா ஹாரிஸின் வாக்குறுதிகள், பிரச்சாரங்கள், அவரது ஆதரவாளர்களின் கருத்துகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஆசிய-அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பு ஏ.ஆர்.ரகுமானின் பிரச்சார வீடியோவிற்கான ட்ரெயிலரை வெளியிட்டுள்ளது. ரகுமானுக்கு ஆஸ்கார் விருது பெற்றுத் தந்த ஜெய் ஹோ பாடல் பின்னணியில் ஒலிக்க, ஏ.ஆர். ரகுமான் கமலா ஹாரிஸை ஆதரித்து பலரிடம் வீடியோ எடுப்பது போன்றும், கையில் கமலா என எழுதப்பட்ட பேட்சை வைத்துள்ளது போன்றும் அந்த வீடியோ உள்ளது.

 

இசைக் கச்சேரி

வரும் நவம்பர் 5ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிகளுடன் இந்த பிரச்சார வீடியோவும் வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், விரைவில் ஏ.ஆர். ரஹ்மானுடன் ஒரு சிறப்பான மாலைப் பொழுதை கொண்டாட தயாராக இருங்கள். அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வரலாற்று சிறப்பு தருணத்தை ஏ.ஆர். ரஹ்மானின் உலகத்தரம் வாய்ந்த நேரடி இசை நிகழ்ச்சியுடன் இணைந்து கொண்டாடுங்கள்" என்று ஆசிய-அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சி நடக்கவிருக்கும் தேதி குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. அத்துடன் ஏ.ஆர்.ரகுமானும் இதுகுறித்து எவ்வித தகவலும் தெரிவிக்காத நிலையில், இந்நிகழ்ச்சிக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.