HBD MM Keeravani: 'நாட்டு கூத்து' பாடல் மூலம் நாட்டையே ஆட வைத்த இசை அமைப்பாளர் எம்.எம்.கீரவாணி பிறந்த நாள் இன்று
1997இல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அன்னமாச்சாரியார் திரைப்படத்திற்காக கிடைத்தது. மேலும் தமிழக அரசு திரைப்பட விருதுகள், ஆந்திர அரசாங்கம் தருகின்ற நந்தி விருது போன்றவற்றை வென்றுள்ளார்.
கொடுரி மரகதமணி கீரவாணி என்பது தான் பிரபல இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் முழுப் பெயர்.
இவருடைய பல பாடல்கள் பின்னணிப் பாடகர்களான எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் சித்ரா ஆகியோரால் பாடப்பெற்றது.
1997இல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அன்னமாச்சாரியார் திரைப்படத்திற்காக கிடைத்தது. மேலும் தமிழக அரசு திரைப்பட விருதுகள், ஆந்திர அரசாங்கம் தருகின்ற நந்தி விருது போன்றவற்றை வென்றுள்ளார்.
சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ஆர்ஆர்ஆர்
இவரது இசையில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைத்ததற்காக கோல்டன் குளோப் விருது மற்றும் ஆஸ்கர் விருதை வென்றார்.
தமிழ் திரைப்படங்களில் இவரை மரகதமணியாக பலருக்கு தெரியும்.
இவர் இசையமைத்த பல பிரபல பாடல்களை இன்று வரை இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்கள் என்றே நினைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள்.
குறிப்பாக, இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கிய அழகன் படத்தில் இடம்பெற்ற பாடல்களை இளையராஜா இசையமைத்ததாகவே பலர் எண்ணுவர். ஆனால், அந்தப் படத்திற்கு இசையமைத்தது மரகதமணிதான்.
'அழகன்' திரைப்படத்தின் இசைக்காக 1991ஆம் ஆண்டு தமிழக அரசின் விருதை பெற்றார். கீரவாணி 1997 ஆம் ஆண்டு 'அன்னமையா' என்ற படத்திற்கு தேசிய விருது பெற்றார்.
பாகுபலி இரண்டு பாகங்களுக்கும் ஆகச் சிறந்த இசையை வழங்கியிருப்பார்.
கோதாவரி மாவட்டத்தில் பிறந்தார்
கீரவாணி ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் கோவூரில் ஒரு தெலுங்கு பேசும் குடும்பத்தில் பாடலாசிரியரும் திரைக்கதை எழுத்தாளருமான கோடூரி சிவ சக்தி தத்தாவுக்குப் 1961ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி பிறந்தார். இவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, இசையமைப்பாளர்கள் எம்.எம்.ஸ்ரீலேகா, கல்யாணி மாலிக் மற்றும் எழுத்தாளர் எஸ்.எஸ்.காஞ்சி ஆகியோரின் உறவினர் ஆவார். இவர் திரைக்கதை ஆசிரியர் வி.விஜயேந்திர பிரசாத்தின் நெருங்கிய சொந்தக்காரர்.
பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என இசையமைப்பாளர் பணியுடன் பல பணிகளை செய்துவரும் பன்முகக் கலைஞர் எம்.எம்.கீரவாணி.
இவருக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதையும் வழங்கி கவுரவித்தது.
ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக அகாடமி விருதை வென்றதைத் தொடர்ந்து சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று இந்திய இசையை உலக அரங்கில் வைத்தார். இந்திய இசைக்கலைஞர்களை, குறிப்பாக பிராந்திய கலைஞர்களை ஊக்குவிப்பதற்கான ஒரு ஊக்கியாக தனது சாதனை செயல்பட்டது என்று அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார், அவர்கள் பிரதான சினிமாவுடன் தொடர்புடையவர்களாக இல்லாவிட்டால் முன்பு புறக்கணிக்கப்பட்டனர். இருப்பினும், இசைத் துறையின் தற்போதைய நிலை குறித்து அவர் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார், இது ஒரு சோகமான நிலையில் உள்ளது என்று அவர் கூறுகிறார்.
"இந்தியாவில், இசை இன்னும் திரைப்படங்களைப் பற்றியது, மேலும் இசைக் கலைஞர்கள் பரந்த பார்வையாளர்களை அடைய தங்கள் பணிக்காக திரைப்படத் தயாரிப்பாளர்களைச் சார்ந்துள்ளனர்," கீரவாணி தொடர்கிறார், “நாள் முடிவில், இது அனைத்தும் ஒரு படத்தின் வெற்றியைப் பொறுத்தது. படம் ஹிட்டானால் பாடல்கள் நன்றாக ஓடும். நமக்கு மேலும் மேலும் சுயாதீன இசைக்கலைஞர்கள் தேவை” என்று கூறினார்.
அவருக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
டாபிக்ஸ்