மீண்டும் தந்தையான இசையமைப்பாளர்.. 2ம் திருமணத்திற்கு பின் செய்த சம்பவங்களால் பாராட்டை பெறும் தம்பதி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மீண்டும் தந்தையான இசையமைப்பாளர்.. 2ம் திருமணத்திற்கு பின் செய்த சம்பவங்களால் பாராட்டை பெறும் தம்பதி!

மீண்டும் தந்தையான இசையமைப்பாளர்.. 2ம் திருமணத்திற்கு பின் செய்த சம்பவங்களால் பாராட்டை பெறும் தம்பதி!

Malavica Natarajan HT Tamil
Oct 25, 2024 10:26 AM IST

இசையமைப்பாளர் டி.இமான் 2ம் திருமணத்திற்குப் பின் பெண் குழந்தைக்கு தந்தையாகி உள்ள நிலையில், அவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மீண்டும் தந்தையான இசையமைப்பாளர்.. 2ம் திருமணத்திற்கு பின் செய்த சம்பவங்களால் பாராட்டை பெறும் தம்பதி!
மீண்டும் தந்தையான இசையமைப்பாளர்.. 2ம் திருமணத்திற்கு பின் செய்த சம்பவங்களால் பாராட்டை பெறும் தம்பதி!

2ம் திருமணம்

இந்நிலையில், இவர் தனது மனைவி மோனிகாவை கடந்த 2021ம் ஆண்டு பிரிந்தார். இது இமான் குறித்து பல விமர்சனங்களை எழுப்பிய நிலையில், உபால்டு என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின், இமானும் உபால்டும் சேர்ந்து பல உதவிகளை மக்களுக்கு செய்து வந்த வண்ணமாக உள்ளனர். அப்படி இருக்கையில், டி.இமான் தற்போது பெண் குழந்தை ஒன்றிற்கு தந்தையாகி உள்ளார்.

குழந்தைக்கு தந்தையான இமான்

இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், கண் பார்வையற்ற தம்பதியினர் ஏற்கனவே உள்ள பிள்ளையை கவனிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையை பராமரிக்க மிகவும் சிரமப்பட்டதாகவும் தெரிவித்தனர். இதனால், அவர்களிடமிருந்து இந்த பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளதாக தெரிவித்தனர். இதனை அறிந்த மக்கள் இமான்- உபால்டு தம்பதியை பாராட்டி வருகின்றனர்.

உபால்டு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகியுள்ளது. அவருக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ள நிலையில், தற்போது இவர்கள் இரண்டாவதாக பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து உள்ளனர்.

விவாகரத்து

டி. இமான் மோனிகா என்பவரை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்த நிலையில், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். அப்போது அந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இவர்கள் இருவரும் விவாகரத்து பெற நடிகர் சிவகார்த்திகேயன் தான் காரணம் என பலரும் குற்றம்சாட்டி வந்தனர். இதனால் பல விமர்சனங்களை சந்தித்து வந்த இமான், தன் 2ம் மனைவியுடன் பல சமூக சேவைகளை செய்து வருகிறார்.

பலருக்கும் வாழ்க்கை அளித்த இமான்

இவர் சமூக சேவைகளுடன், இசைத் துறையிலும் பல்வேறு திறமையான கலைஞர்களை அறிமுகம் செய்து வைத்து பலருக்கும் வாழ்க்கை அளித்துள்ளார். இதனால் அவர் குறித்து சமூகத்தில் பல நல்ல அடையாளங்களும் உள்ளது. அதனுடன் இணைந்து தற்போது இந்த பெண் குழந்தை தத்தெடுப்பு சம்பவமமும் கலந்துகொண்டுள்ளது.

 

இமானின் தத்துவம்

மனைவியை விவாகரத்து செய்தது குறித்து இமான் பேசியது வைரலானது. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், நமக்கு பிடித்த காதலி மனைவியாக மாறுவார் என்பது சந்தேகம் தான். அதே மாதிரி மனைவி ஒரு நல்ல காதலியாக இருக்கப்போவதும் இல்லை. நமக்குப் பிடித்த காதலியாகவும் இருக்கப்போவதில்லை.

நமது குழந்தைகள் நம்முடைய செல்வன் என்று நாம் வளர்க்கிறோம். இருப்பினும் ஒரு கட்டத்தில் அதுவும் மாறிவிடுகிறது. நல்ல பெற்றோர்களுக்கு நல்ல குழந்தைகள் அமைவதில்லை. அதே மாதிரி நல்ல குழந்தைகளுக்கு நல்ல பெற்றோர்கள் அமைவதில்லை என வருத்தம் தெரிவித்தார். அத்துடன், இசைத் துறையில் சாதாரண ஒரு கலைஞராக இருந்தாலே போதும் என்று நினைத்தேன். ஆனால், இசையமைப்பாளராக இருக்கும் வாய்ப்பையும் அந்த கடவுளே கொடுத்தார் எனப் பேசியிருந்தார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.