Goundamani: வணிக வளாகம் கட்ட ஒப்பந்தம்! கவுண்டமணி நிலம் தொடர்பான மேல்முறையீடு மனு தள்ளுபடி-mhc upholds single judge order in goundamani property dispute case and dismissed appeal - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Goundamani: வணிக வளாகம் கட்ட ஒப்பந்தம்! கவுண்டமணி நிலம் தொடர்பான மேல்முறையீடு மனு தள்ளுபடி

Goundamani: வணிக வளாகம் கட்ட ஒப்பந்தம்! கவுண்டமணி நிலம் தொடர்பான மேல்முறையீடு மனு தள்ளுபடி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 16, 2024 01:52 AM IST

வணிக வளாகம் கட்டுவதற்கு நடிகர் கவுண்டமணி கொடுத்த நிலத்தை அவரிடம் ஒப்படைக்குமாறு தனி நீதிபதி பறபித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது.

நடிகர் கவுண்டமணி
நடிகர் கவுண்டமணி

தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

ஐந்து கிரவுண்டுகள் கொண்ட இந்த இடத்தில் சுமார் 22, 700 சதுர அடி பரப்பளவில் வணிக வளாகம் கட்டி தர பிரபல தனியார் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்திருந்தார் கவுண்டமணி. 15 மாத்தில் இந்த கட்டட பணிகள் முடித்து தந்து ஒப்படைக்குமாறு ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.

இதற்கான ரூ. 3.58 கோடி ஒப்ந்ததாரர் கட்டணம் போடப்பட்டு, 1996 முதல் 1999 காலகட்டம் வரை ரூ. 1.4 கோடி கவுண்டமணி தரப்பில் இருந்து செலுத்தப்பட்டது.

ஆனால் கடந்த 2003ஆம் ஆண்டு வரை இந்த இடத்தில் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை என கூற நடிகர் கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கறிஞர் ஆணையரை நியமித்தார். இதையடுத்து நீதிமன்றம் உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட கட்டிடத்தை ஆய்வு செய்த வழக்கறிஞர் ஆணையர் ரூ. 46. 51 லட்சத்துக்கு மட்டுமே பணிகள் முடிவடைந்திருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தார்.

தனி நீதிபதி தீர்ப்பு

இதைத்தொடர்ந்து இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி, கட்டுமான பணிகள் முழுமையாக முடித்த பின்னர் பணம் தராவிட்டால் அதை கேட்க முடியும். தற்போது முடித்திருக்கும் பணிகளை ஒப்பிடுகையில் ரூ. 63 லட்சம் அதிகமாகவே கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக கவுண்டமணி தரப்பில் தெரிவித்தது. எனவே கவுண்டமணியிடமிருந்து பெற்ற 5 கிரவுண்ட் நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த 2008ஆம் ஆண்டு தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த ஆர். சுப்பிரமணியன், ஆர். சக்திவேல் அடங்கிய நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தனர். கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.

கவுண்டமணி படங்கள்

கவுண்டமணி தற்போது ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவி மரியா, வையாபுரி மற்றும் ராஜேஸ்வரி கோஸ்டர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படத்தில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு, நகைச்சுவை நடிகர் சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் நய்யாண்டி பாணியில் இந்த படம் தயாராகி வருகிறது. சித்தார்த் விபன் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தில் கவுண்டமணி கதையின் நாயகனாக நடித்து வருகிறார். படம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

Google News: https://bit.ly/3onGqm9

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.