Goundamani: அரசியல்வாதியாக கவுண்டமணி! இறுதிகட்டத்தை நெருங்கிய ஒத்த ஓட்டு முத்தையா
அரசியல்வாதி, மூன்று தங்கைகளுக்கு அண்ணன் கதாபாத்திரத்தில் கவுண்டமணி காமெடி கலந்த அரசியல் படமான ஒத்த ஓட்டுஓட்டு முத்தையா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஒத்த ஓட்டு முத்தையா படத்தில் அரசியல்வாதியாகவும், மூன்று தங்கைகளுக்கு அண்ணனாகவும் நடிக்கும் கவுண்டமணி
காமெடி கிங் கவுண்டமணி கதையின் நாயகனாக தொடர்ந்து சினிமாக்களில் நடித்து வருவது அனைவரும் அறிந்த விஷயமே. கடைசியாக 2017இல் வெளியான வாய்மை என்ற படத்தில் நடித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து ஆறு ஆண்டு இடைவெளிக்கு பின்னர் ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் நடித்து வருகிறார். சுந்தரி நீயும் சுந்தரன் நானும், கிச்சா வயசு 16 படங்களை இயக்கிய சாய் ராஜகோபால் இந்தப் படத்தை இயக்குகிறார்.
இதையடுத்து ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேமிலி டிராமா மற்றும் அரசியல் கலந்த காமெடி படமாக இது உருவாகி வருகிறது.